India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க குன்னூர் ஊட்டி இடையே இம்மாதம் 28ஆம் தேதி முதல் ஜூலை 7 வரை வாரம்தோறும் நான்கு நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. மேலும் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே தலா ஒரு முறையும் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று முதல் துவங்குவதாக ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரியில் தேயிலைக்கு அடுத்து மலைத்தோட்ட பயிர்களான கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்படுகின்றன. தற்போது கேரட் அறுவடை நடந்துவரும் வேளையில் கேத்தி- பாலாடாவில் அறுவடை செய்யப்பட்ட கேரட் அப்பகுதியிலுள்ள இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டபோது, அரை கிலோ எடை உள்ள ஆறு விரல்களுடன் கூடிய அதிசய கேரட் இருப்பதை தொழிலாளர்கள் பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து வியந்தனர்.
பந்தலூர் அருகே எருமாடு திருமங்கலம் நேற்று காலை கல்யாணி என்ற பழங்குடி பெண் (48) மர்மமாக இறந்து கிடந்தார். போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டி.எஸ்.பி. ஜெயபாலன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் பிரிவு இணை இயக்குநர் ரமேஷ், கைரேகை நிபுணர் எம்.ரமேஷ் தலைமையிலான குழுவினர், மோப்ப நாய் மோட்சா உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை ஏற்று, அதன்படி, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் பகுதிகளில் பொது இடங்களில் அமைந்துள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை உடனே அகற்றி அதன் விவரங்களை மாவட்ட அலுவலகத்தில் வரும் மார்ச் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் அதிகமான விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிடுகின்றனர். அதில், இந்த ஆண்டு உருளைக்கிழங்கு விலை விவாசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துளாளது. அதன்படி இன்றைய விலை நிலவரமாக உருளைகிழங்கின் அதிகபட்ச விலையாக ரூ.1380 – ரூ.840 ஆகவும், பொடி கிழங்கிற்கு ரூ.580 – ரூ.590 விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலமாக விற்கப்படுகிது
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் மார்ச்.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் விவசாயிகளின் உருளை கிழங்கை தினசரி பொது ஏலத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன் அடிப்டையில் இன்று ஊட்டி உருளை கிழங்கு முதல் ரகம் ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ 1380 க்கும், குறைந்த பட்சமாக ஒரு மூட்டை ரூ.840 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 275 மூட்டைகள் விற்றன.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் தமிழகமெங்கும் திமுக அரசைக் கண்டித்து அனைத்து நிர்வாகிகளும் கருப்புக்கொடி கட்டி போராட வேண்டும் என்று கூறினார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று பாஜகவினர் கருப்பு நிற உடை அணிந்து தங்களது இல்லத்தில் கருப்பு கொடியை கட்டி தங்களது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் உதகையை சேர்ந்த பாஜக நிர்வாகி விஜயலட்சுமி வீட்டில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றுவருகிறது.
சென்னை ரேஸ் கிளப் நிர்வாகம் பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் குத்தகை தொகையை கட்டாத நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவு படி, ஊட்டி குதிரை பந்தய மைதானத்தை வருவாய் துறை கையகப்படுத்தியது. இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் குதிரை பந்தய மைதானத்தை, ‘சுற்றுச்சூழல் பூங்காவாக’ மாற்ற ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது, சுற்றுலா விரும்பிகள் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
ஊட்டியில் அனைத்து வணிகர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு வணிகர் பேரமைப்பின் தலைவர் முகமது பாரூக் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறுகையில், “இ-பாஸ் முறையின் கீழ் சுற்றுலா வாகனங்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே, இதை எதிர்த்து ஏப்ரல் 2இல் முழு கடை அடைப்பு நடைபெறும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.