Thenilgiris

News March 26, 2025

நீலகிரி; தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

நீலகிரியில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

News March 26, 2025

ராணுவத்தில் சேர விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்

image

நீலகிரி: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்தேர்வுக்கான பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். முதலில் ஆன்லைன் பொதுத்தேர்வு (சிஇஇ) பின்னர் ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும்.உடனே SHARE பண்ணுங்க.

News March 26, 2025

நீலகிரி: அருவியில் குளித்தவர் தவறி விழுந்து சாவு

image

கோத்தகிரியை அடுத்து உள்ள ‘உயிலட்டி அருவி’யில் சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கூக்கல்தொரை சீகெஒலா கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (31) என்பவர் தனது நண்பர்களுடன் அங்கு குளிக்கச் சென்றார். அப்போது, கால் வழுக்கி அருவியில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் சென்று உடலை மீட்டு விசாரித்துவருகின்றனர்.

News March 25, 2025

மக்களே கட்டாயம் மிஸ் பண்ணாதீங்க

image

நீலகிரி: AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.

News March 25, 2025

கோடநாடு கொலை: ஜெயலலிதா வளர்ப்பு மகனுக்கு சம்மன்

image

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று (மார்ச் 25) ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மார்ச் 27ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக சி.பி.சி.ஐ.டி., தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

News March 25, 2025

நீலகிரி அம்மா மருந்தகங்கள் செயல்படாது

image

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அம்மா மருந்தகங்கள் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மருந்தகங்களின் வருடாந்திர கணக்குகள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால் மாவட்டத்தில் அம்மா மருந்தகங்கள் மேற்கண்ட தினங்களில் செயல்படாது என பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

News March 25, 2025

முதல்வர் நீலகிரி வருகை: சீரமைப்பு பணி தீவிரம்

image

வருகின்ற ஏப்ரல் 5, 6 தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தர உள்ளார். அவ்வாறு வருகை தரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சரின் வருகையொட்டி மலைப்பாதையில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

News March 25, 2025

நீலகிரி: இரவில் நடக்கும் கடத்தல் சம்பவம்!

image

கோத்தகிரி, குன்னூர், ஊட்டி சுற்றுப்புற பகுதியில், வனத்துறையின் விதிகளை மீறி, இரவு நேரத்தில் லாரிகளில் மரம் வெட்டி கடத்தப்படுவது தொடர்கிறது என மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் தும்பூர் போஜன் குற்றம்சாட்டி உள்ளார். விதிமீறி, அனுமதி இல்லாமல் கடத்தப்படும் மரங்களை அவ்வப்போது, வனத்துறையினர் பிடித்து அபராதம் விதித்தாலும், கோத்தகிரி வழியாக இரவில் மரக்கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன.

News March 25, 2025

தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானையால் பரபரப்பு

image

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒற்றை காட்டு யானை நேற்று மதியம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் டபுள் ரோடு அருகே சாலையின் குறுக்கே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்தி விட்டனர்.

News March 24, 2025

நீலகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு , வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் மாவட்டத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ரவி அதிகாரிகள் உள்ளனர்.

error: Content is protected !!