India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புது டெல்லி பாராளுமன்ற அலுவலகம் முன்பு நீலகிரி மாவட்டத்தை சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இன்று தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் நிலம் சார்ந்த பிரச்சினைகள், மனித-விலங்கு மோதல், குடியிருப்புக்குள் உலா வரும் யானைகள் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ‘மக்களை வெளியேற்றியதே’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீலகிரி: ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக நேற்று வந்த தகவலை அடுத்து நீலகிரி எஸ்பி என்.எஸ்.நிஷா, போலீஸ் மோப்ப நாயுடன் நேரில் சென்று 1 மணி நேரம் ஆய்வு செய்தார். மேலும், பள்ளி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் செயல்பட்டு வருவதை ஆராய்ந்ததில், மர்ம நபர் நடமாட்டம் இல்லை என தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், 6 தாலுகா பகுதிகளில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோத்தகிரி நெடுஞ்சாலைதுறை அலுவலக வளாகத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பர்லியார் ஊராட்சியில் உள்ள டால்பின் நோஸ் காட்சிமுனையில் உள்ள அரசுக்கு சொந்தமான 12 கடைகள் மற்றும் கார் பார்கிங் டென்டர் காலம் நிறைவடைந்த நிலையில் முறைப்படி பொதுமக்களுக்கு தெரிவிக்காமலும் துனைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கும் தெரியாமல் கடைகளை திறந்து கொடுத்தமைக்காக ஊராட்சி தலைவிக்கு தாசில்தார், பி.டி.ஒ எச்சரிக்கை விடுத்தனர்.
நீலகிரி: உதகையில் உள்ள பிரபல தனியார் ஆங்கில பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார், வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என தெரிவித்துள்ளனர். இதனிடையே 2 மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
நீலகிரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் அரசு அதிகாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்களை மிரட்டி போலியாக மோசடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை தனக்கு தெரியும் எனக் கூறி பொதுமக்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்து அல்லது பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.
நீலகிரி: குன்னூர் கன்டோன்மென்ட் வாரியம் சார்பாக ஸ்வச்தா ஹி சேவா விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியை, எம்ஆர்சி கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில்குமார் யாதவ், கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபாசாகிப் லோட்டே ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக மனித சங்கிலி நடந்தது.
குன்னுார் அருகே உள்ள மலை கிராமங்களான மூப்பர்காடு பழனியப்பா மாணார் நீராடி பள்ளம் ஆகிய இடங்களில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் நேற்று மாலை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் செளந்தர்ராஜன் தலைமையில் வனப்பகுதியில் வசித்து வரும் ஆதிவாசி மக்களிடம் இந்த கிராமங்களுக்கு சந்தேகப்படும் வகையில் எவரேனும் நடமாடினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் அபாயமுள்ள 283 பகுதிகள் 42 மண்டல குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள், 3500 முதல் நிலை மீட்பாளர்கள், 200 பேரிடர் கால நண்பர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிப்புகளை மாவட்ட மற்றும் வட்ட அவசர கால கட்டுபாட்டு மையங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்தார்.
குன்னுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலையோர பகுதிகளில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில், நேற்று ஊட்டியில் இருந்து வெலிங்டன் நோக்கி வந்த கார், நிறுத்தி வைத்திருந்த இரு பைக்குகள் மீது ஏறி நின்று விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த இருவர் காயமின்றி தப்பினர். வெலிங்டன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.