India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விவசாய விளைபொருளுக்கு அதிக விலை தருவதாக மோசடியில் ஈடுபட்டு 13 வருடம் தலைமுறைவாக இருந்த நபர், நீலகிரி மாவட்டம் கூடலூரில் பதுங்கி இருப்பதாக ஈரோடு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்தது மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் கூடலூருக்கு சென்று, கிருஷ்ணனை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
குன்னூர்: புதுடெல்லியில் சர்வதேச அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த, குன்னூரை சேர்ந்த மாற்றுதிறனாளியான சரவணன் என்பவருக்கு, குன்னூர் நகர திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்திரபிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட ‘பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா’ நடத்திய 22வது ஆண்டு, வலுதூக்கும் போட்டி போட்டியில் அவர் கலந்துகொண்டார்.
தமிழக முதல்வர் நாளை நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதற்காக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோத்தகிரி உதகை தேசிய நெடுஞ்சாலையை, கோட்ட பொறியாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சாலையின் இரு புறமும் உள்ள புதர்கள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30 காலிபணியிடங்கள் உள்ளன. மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த பணிகளுக்காக <
தமிழகத்தில் பல்வேறு மாவட்டடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இன்றும் (ஏப்.4) தமிழகத்தில் சில மாவட்டடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
காசிம் வயலைச் சேர்ந்த ஜெனிஃபர் கிளாடிஸ்(31) என்பவர் கணவர் ராஜ்குமாரிடம் விவாகரத்து பெற்று, தனது குழந்தைகள் ஏஞ்சல் ஹாசினி, அனுஶ்ரீ ஆகியோருடன், அலி மொய்தீன் குட்டி என்பவரது வீட்டில் குடியிருந்து வருகிறார். இவரை அலி மொய்தீன் குட்டி நேற்றிரவு இரவு வெட்டி கொலை செய்துள்ளார். இதனிடையே இன்று அலி மொய்தின் குட்டி காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடந்தது. 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்தால் ரூ.7 கோடி முதல் 10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, வணிகர்கள் தெரிவித்துள்ளனர். காட்டேஜ்கள், உணவு விடுதிகள் ஆகியவை போராட்டத்தில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க இங்கு <
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று(ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
கூடலூர் அருகே தவளை மலை காட்சி முனை பகுதியில் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று(ஏப்.02) கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை பகுதியை சார்ந்த ஜாபர் என்ற சுற்றுலா பயணி அங்கு சென்ற போது அங்கிருந்த தேனீக்கள் அவரை கொட்டியதில் அவர் பரிதமாக உயிரிழந்தார். அவரது உடல் தற்போது கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.