India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (ஜூலை 17) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை முதல் அதி கனமழைக்கு பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், உதகை உள்ளிட்ட இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி ஆட்சியர் அருணா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மக்களுடன் முதல்வர் திட்டம் ஜூலை 11ல் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக வரும் 19ம் தேதி உதகை அருகே தூனேரி சமுதாய கூடத்திலும், கூடலூர், மசினகுடி குழந்தை இயேசு தேவாலய அரங்கிலும், கோத்தகிரியில் கடினமலா புனித அந்தோனியார் மண்டபத்திலும் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற உள்ளது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்கோத்தகிரி அருகே அவ்வூர் பகுதியை சேர்ந்த மாணவன் ரெணோ. இவர் கோத்தகிரி ஐசிஎஸ் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் ரெணோ திருவண்ணாமலையில் நடந்த மாநில கேரம் போட்டியில் பங்கேற்று விளையாடி 3வது இடம் பிடித்து கான்பூரில் நடக்கும் தேசிய அளவிலான கேரம் போட்டியில் விளையாட தேர்வு பெற்றுள்ளதை பள்ளி நிர்வாகத்தினர் நேற்று பாராட்டினார்கள்.
தொடர் மழையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில்ஊட்டி, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய நான்கு இடங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும தலா 10 பேர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 34 செமீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
தமிழகம் முழுவதும் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை ஊட்டியில் மூன்று கடைகளிலும், குன்னுாரில் ஆறு கடைகளிலும் சுகாதாரமற்ற முறையில் பானி பூரி தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு <
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது, இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி. நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள சின்னம்பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற இவர் மீது அதிக வேகமாக வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நீதிபதி கருணாநிதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மர்ம ஆசாமி நிற்காமல் விரைந்து சென்றார். இந்த விபத்து தற்செயலா, இல்லை திட்டமிட்டதா எனப் போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ராமசந்திரன் தனது சொந்த தொகுதியான குன்னூரில் உள்ள சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் பெண்கள் உள்பட பலர் மனுக்களை கொடுத்தனர். அவற்றை பெற்ற அமைச்சர் துறை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.