Thenilgiris

News January 2, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜன.1) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களின் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. அவசர தேவைகளுக்குப் பொதுமக்கள் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

நீலகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>’Tamil Nilam’<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 1, 2026

நீலகிரி: அரசின் முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!

News January 1, 2026

நீலகிரி: வீடு கட்ட ரூ.2.50 லட்சம் மானியம் வேண்டுமா?

image

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள்அருகே உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம். (SHARE)

News January 1, 2026

ஊட்டியே ஸ்தம்பித்தது

image

ஊட்டிக்கு வார விடுமுறை நாட்களில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் வருகை தருவது வழக்கம். தற்போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக, நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை ஊட்டி நகரில் அதிகரித்தது. இதனால், பல்வேறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News January 1, 2026

நீலகிரி: அவசர காலத்தில் உதவும் எண்.. SAVE பண்ணுங்க

image

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகாளல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், இவற்றால் அவ்வப்போது உயிர் பலியும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அவசர உதவி எண் தான் 1800 425 4343. இதில் வனவிலங்குகளின் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம். (SHARE)

News January 1, 2026

நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மலை ரயில் அதிகாரிகள் தெரிவிக்கையில் விடுமுறைகளை முன்னிட்டு ஜனவரி மாதம் 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.இந்த சிறப்பு மலை ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்து சேரும். அதேபோல் அடுத்த நாள் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை ரயில் சென்றடையும்.

News January 1, 2026

நீலகிரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா?

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு<> க்ளிக் <<>>செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தலை தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். (SHARE)

News January 1, 2026

BREAKING: நீலகிரி கலெக்டர் அதிரடி உத்தரவு

image

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி ஆட்சியர் தெரிவிக்கையில் பறவை காய்ச்சல் நோய்க்கு, சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை என்பதால், கேரளா மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவது, மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

News January 1, 2026

கூடலூரில் சுட்டு தற்கொலை

image

கூடலுார் புத்துார்வயல் அருகே வடவயல் பகுதியை சேர்ந்தவர் குட்டிகிருஷ்ணன். தனது வீட்டில் தனியாக தங்கி இருந்தார். நேற்று காலை, அவரின் மைத்துனர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, முன் அறை இருக்கையில் நாட்டு துப்பாக்கியுடன் அமர்ந்தபடி முகத்தில்பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என வந்துள்ளது.

error: Content is protected !!