Thenilgiris

News July 18, 2024

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

நீலகிரிக்கு தொடர்ந்து ரெட் அலர்ட்

image

நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கடும் கனமழை பெய்துவருகிறது. 21 சென்டிமீட்டர் மேலாக கனமழை பெய்து வருவதால் பலத்த மழை பெய்து வருவதால் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தற்போது ரெட் அலர்ட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 18, 2024

நீலகிரி மாவட்ட புதிய ஆட்சியருக்கு வரவேற்பு

image

நீலகிரி மாவட்ட புதிய ஆட்சியராக லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று பதவி ஏற்றார். அப்பொழுது நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட திட்ட குழு தலைவர் எம்.பொன்தோஸ் புதிய ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீருக்கு சால்வை  அணிவித்து மலர் கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்ய தன்னீரு அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

நீலகிரியில் மிக கனமழை

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

நீலகிரி ஆட்சியராக பொறுப்பேற்ற பின் முதல் பேட்டி

image

நீலகிரி மாவட்ட புதிய ஆட்சி தலைவராக லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று (ஜூலை 17) பதவி ஏற்றதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், மழை தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என்றும், நீலகிரியின் கலெக்டராக பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பேசினார்.

News July 17, 2024

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூலை 18) காலை 8.30 மணி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை காலை 8.30 மணி வரை கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 17, 2024

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட்

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 17) இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

நீலகிரி மாவட்ட புதிய ஆட்சியர் பதவி ஏற்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டு ஈரோடு வணிகவரி இணை ஆணையாளராக பதிவு வகித்த லக்‌ஷ்மி பாவ்யா டன்னீரு நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, இன்று (ஜூலை 17) பகல் 2 மணி அளவில் நீலகிரி மாவட்டத்தின் 116ஆவது ஆட்சியராக லக்‌ஷ்மி பாவ்யா தண்ணீரு பதவி ஏற்றுக் கொண்டார்.

error: Content is protected !!