Thenilgiris

News July 29, 2024

சவுக்கு சங்கருக்கு 24 மணி நேர போலீஸ் காவல்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி புதுமந்து இன்ஸ்பெக்டர் அல்லிராணி கொடுத்த புகாரின் பேரில் ஊட்டி கோர்ட்டில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், நீதிபதி தமிழினியன் 24 மணி நேரம் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும், 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அவரது வக்கீலை சந்திக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

News July 29, 2024

முன்னாள் எம்.பி. மறைவு: பாஜக நிர்வாகி நேரில் ஆறுதல்

image

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், ஹட்கோ (HUDDCO) இயக்குனருமான சபிதா போஜன், மறைந்த நீலகிரி முன்னாள் மக்களவை தொகுதி உறுப்பினர் மாஸ்டர் மதன் இல்லத்திற்கு இன்று (29.7.24) நேரில் சென்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது மனைவி மற்றும் மகன்களிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

News July 29, 2024

நீலகிரி காவல் துறை சார்பில் விழிப்புணர்வு 

image

நீலகிரியில் காவல் துறையினர் சார்பில் மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு போதை, போக்குவரத்து, போக்சோ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (28-ம் தேதி) கீழ்கோத்தகிரியில் போலீஸ் எஸ்.பி.சுந்தரவடிவேல் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். இதில் டி.எஸ்.பி.குமார், இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

News July 29, 2024

சிம்ஸ் பூங்காவில் பெர்சிமன் பழ சீசன் ஆரம்பம்

image

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ‘பெர்சிமன்’  என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டின் தேசிய பழ விளைச்சல் தொடங்கியுள்ளது. சிம்ஸ் பூங்கா அருகே உள்ள பழ பண்ணையில் பெர்சிமன் விற்பனை தொடங்க உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெர்சிமன் பழங்களை பண்ணையில் இருந்து வாங்கிச் செல்லலாம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

News July 29, 2024

சவுக்கு சங்கர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்

image

பெண் போலீசாரை பற்றி தவறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஊட்டி புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லி ராணி, சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்திருந்தார். அதன் பேரில் ஊட்டி கோர்ட் நீதிபதி தமிழினியன் முன்பு யூடியூபர் இன்று (29.7.24) ஆஜர் படுத்தப் பட்டார்.

News July 29, 2024

நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தி்ல் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில் கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News July 28, 2024

நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தி்ல் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 28, 2024

மலை ரயில் சேவை ரத்து

image

குன்னூர் பகுதியில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் சேவை ஐந்து முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழையின் காரணமாகவும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும் மலை ரயிலில் பயணிக்கும் பாதையில் பல இடங்களில் மரங்கள் பாதையின் குறுக்கே விழுந்துள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News July 28, 2024

தமிழக எல்லை பகுதியில் நக்சல் நடமாட்டம்

image

தமிழக எல்லை ஓரங்களில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழக அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு, கேரளா தண்டர் போஸ்ட் படை, கர்நாடகா சிறப்பு அதிரடி போலீசார் இணைந்து எல்லையோர வன பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நக்சல் மனோஜ் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு பகுதியிலும் தேடல் விரிவு படுத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

News July 28, 2024

நீலகிரி Ex MP இறுதி சடங்கில் அமைச்சர்கள்

image

முன்னாள் நீலகிரி எம்பி, மாஸ்டர் மதன் இறுதி சடங்கு நிகழ்வில், ஜார்கண்ட் கவர்னர் சி.பி. ராதா கருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் வாசன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் உள்ளிட்ட பலர் நேற்று மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நித்தியானந்தா மின் மயானத்தில் உடல் தகனம் நடந்தது.

error: Content is protected !!