Thenilgiris

News August 8, 2024

நீலகிரி காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள்

image

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீலகிரி காங்கிரஸ் கமிட்டி சார்பாக ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களை ஆர். கணேஷ் எம்.எல்.ஏ இன்று வாகனத்தில் அனுப்பி வைத்தார். இதில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், சமூக ஊடக பிரிவு தலைவர் மானேஷ் சந்திரன், சேவாதள் தலைவர் மொராஜி, ரகு சுப்பன், செயலாளர்கள் உதகை ரவிக்குமார், ரவிக்குமார், எஸ்.எம்.ரபீக் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News August 8, 2024

நீலகிரியில் மழை பெய்யக்கூடும்!

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News August 8, 2024

நீலகிரி: மாபெரும் கல்விக்கடன் முகாம்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜேஎஸ்எஸ் பார்மசி கல்லூரி அரங்கில் இன்று மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. இந்த முகமை, நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து நடத்தியது. முகாமிற்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை தாங்கினார். இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

News August 8, 2024

BREAKING: நீலகிரி எஸ்பி மாற்றம்!

image

மாநிலம் முழுவதும் 24 காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றும் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்துவரும் சுந்தரவடிவேல் சென்னை பூக்கடை வீதி காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, புதிய எஸ்பியாக நிஷா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிஷா தற்போது சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்துவருகிறார்.

News August 8, 2024

நீலகிரிக்கு வந்த ஜெர்மன் விமான படை

image

நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி முகாமுக்கு, ஜெர்மன் விமானப்படை முதன்மை தளபதி லெப்டினன்ட் கர்னல் இங்கோ கெர் ஹார்ட்ஸ் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர் இன்று மலை ரயிலில் குன்னூர் வந்தனர். அவர்களை ராணுவத்தினர் மற்றும் சுற்றுலாத் துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் சாலை வழியாக குன்னூர் ராணுவ கல்லூரிக்கு அவர்களை அழைத்து சென்றனர்.

News August 8, 2024

நீலகிரி பத்திரிக்கையாளர் சங்க கூட்டம்

image

நீலகிரி பத்திரிக்கையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று உதகை ஜிம் பார்க் ஓட்டலில் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவராக ஆண்டனி, செயலாளராக சரவணன் (பாபு), பொருளாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், பத்திரிகையாளர்களின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிதாக பதவியேற்றோருக்கு, நீலகிரி பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

News August 8, 2024

நீலகிரி: குழுவாக விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

image

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கான திட்டத்தின்கீழ், 10 பேர் கொண்ட குழுவாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஊட்டி பிங்கர் போஸ்ட், ஆட்சியர் கூடுதல் கட்டடத்தில் செயல்படும், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

News August 8, 2024

BREAKING நீலகிரியில் கனமழை!

image

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. நீலகிரியில் வீடுகள் மண்ணில் புதைகின்றன; இதனை புவியியல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்துவருகின்றன. இந்த நிலையில் நீலகிரிக்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News August 8, 2024

நீலகிரியில் யானை பலி: தோட்டக்காரர் தலைமறைவு

image

கூடலூர் ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து முதுமலை கால்நடை டாக்டர்கள் ராஜேஷ் குமார் மற்றும் சுகுமாரன் ஆகியோர் யானை உடலை பரிசோதித்து மின்சாரம் தாக்கி பலியானதை உறுதி செய்தனர். இதையடுத்து தலைமறைவான தோட்ட உரிமையாளரை வனத்துறை தேடி வருகிறது.

News August 8, 2024

நீலகிரியில் அனைத்து வீடுகளிலும் கொடி: பாஜக முடிவு

image

உதகையில் நீலகிரி மாவட்ட பாஜக கூட்டம் மாவட்ட தலைவர் மோகன் ராஜ் தலைமையில் நேற்று மாலை  நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பார்வையாளராக பங்கேற்றனர். கூட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய  கொடியேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

error: Content is protected !!