India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட காவல்துறையினர் புது முயற்சியாக, பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்த, வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பேஸ்புக் லைவ். இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா இன்று செய்தியாளர்களை சந்தித்து விவரித்து பேசினார். அதன்படி, வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை காவல்துறை, முகநூலில் விழிப்புணர்வு நிகழ்வினை ஏற்படுத்துவார்கள்” என்றார்.

நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த <

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட ஒரு பாதுகாப்பு அலுவலர் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட யூனிட்டில் பணியாற்றிட 2 சமூகப் பணியாளர்கள் ஆகிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கடைசி தேதி 10.2.25 ஆகும். மேலும் விவரங்களுக்கு 04232445529 என்ற எண்ணை அழைக்கவும். இதை மற்றவர்களுக்கும் Share பண்ணுங்க.

உதகையில் ஆட்சியர் அலுவலக அரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் பேசும் போது, உதகையில் இரண்டாவது உழவர் சந்தை அமைக்க சாத்திய கூறுகள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வேளாண் வணிக துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கூட்டத்தில் தோட்டக்கலை துறை உள்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

வெலிங்டன் ராணுவ இணைப்புச் சாலையில் செல்ல தடை செய்யப்பட்டது. குன்னூர் வெலிங்டன் ராணுவ மைய பகுதி மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்லும் இணைப்பு சாலை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் கரும்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் விரைவில் பணிகள் நிறைவடைந்து வழக்கம் போல் சாலைப்போக்குவரத்து துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் உள்ள நீர் நிலைகள், குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பகுதிகளில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது. நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி துறைகள், வனத்துறை, மாசு கட்டுப்பாடு வாரியம், தன்னார்வலர்கள் மற்றும் பசுமை காவலர்கள் இதை செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

குடியரசு தினமான நாளை (26/01/25) அனைத்து ஊராட்சி பேரூராட்சி பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராமப்புற ஊராட்சிகளில் நடைபெறும் கூட்டமானது நாளை காலை 11 மணியளவில் துவங்க உள்ளது. எனவே அப்பகுதிக்குட்பட்ட மக்கள் திரளாக கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென நீலகிரி மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் போலீசார் வந்திருந்த நிலையில் இன்டர்போல் சர்வதேச விசாரணை நடப்பதால் மேலும் கால அவகாசம் தேவை என கேட்கப்பட்டதால் வழக்கை பிப்.21ம் தேதிக்கு நீதிபதி முரளிதரன் ஒத்திவைத்தார்.

தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட நம்பர் 3 டிவிஷன் என்ற பகுதியை சார்ந்த ஜெம்சித் என்ற இளைஞரை அதிகாலையில் யானை தாக்கி கொன்றது. இவரது உடல் கூடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து யானை தாக்கி உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், 10 மலையேற்றம் வழித்தடங்களில், மலையேற்றம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மலையேற்ற வழித்தடத்தில், கூடலூர் வழித்தடத்தில் மலையேற்றம் செல்ல, சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை, ஜீன்பூல் தாவர மையத்திலுள்ள மலையேற்ற வழித்தடத்தில் 13 குழுக்கள்; ஊசிமலை மலையேற்றம் வழித்தடத்தில் மூன்று குழுக்கள் மலையேற்றம் சென்று வந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.