Thenilgiris

News January 27, 2025

நீலகிரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 132 மனுக்களை பெற்று கொண்டு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், சீர்மரபினர் நல வாரியத்தில் பதவிப் பெற்ற 06 உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

News January 27, 2025

நீலகிரி: யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை

image

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நேற்று நடைபெற்ற 76வது குடியரசு தின விழாவில் யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியதை சுற்றுலா பயணிகள் பார்த்து பரவசம் அடைந்தனர். நிகழ்ச்சியில் யானைகள் அணிவகுத்து நின்று தேசிய கொடிக்கு தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. இவ்விழாவில் துணை கள இயக்குநர் வித்யா தலைமை வகித்தார்.

News January 27, 2025

நீலகிரியில் 159 பேருக்கு பதக்கம்

image

ஊட்டி அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தினத்தை ஒட்டி நேற்று பல்வேறு திட்டங்களின் கீழ், ரூ.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த அரசு பணியாளர்கள் 159 பேருக்கு பதக்கம், சான்றிதழ்களை நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கி, அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டன.

News January 27, 2025

நீலகிரி: 3வது மனைவியை கொன்ற கணவன் கைது

image

பந்தலூர் அருகே வெட்டுவாடி, மடமூலா பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் யசோதா (54). இவர், 2 மாதங்களுக்கு முன்பு சந்திரன் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். கடந்த டிசம்பர் 24ம் தேதி ஏற்பட்ட தகராறில் யசோதாவை, சந்திரன் கல்லால் தாக்கி கொன்றுள்ளார். இந்த நிலையில் எருமாடு காவல் எஸ்.ஐ. பாஸ்கரன் தலைமறைவான சந்திரனை நேற்று கைது செய்து விசாரித்து வருகிறார்.

News January 27, 2025

இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (26.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News January 26, 2025

ஆயுதப் படையை தலைமை ஏற்று நடத்திய பெண் சிங்கம்

image

உதகையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் காவல்துறையின் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை, தலைமையேற்று நடத்திய நீலகிரி மாவட்ட ஆயுதப்படை பெண் ஆய்வாளர் சரண்யா என்பவற்றின் வீர முழக்கமும், கம்பீர கர்ஜனையும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல ஆண்டுகளுக்கு பின் பெண் அதிகாரி ஒருவர் அணிவகுப்பை தலைமையேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது

News January 26, 2025

களப்பணி வாகனத்தை துவக்கிய ஆட்சியர்

image

”பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவியர்கள் மேற்கொள்ளும் நேரடியான களப்பயணம் செல்லும் வாகனத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News January 26, 2025

காந்தி சிலைக்கு ஆட்சியர் மாலையிட்டு மரியாதை

image

நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட அரசுத்துறை அலுவலர்கள் தன்னார்வ அமைப்பின் நிறுவனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 26, 2025

முதுமலையில் ஆண் யானை குட்டி உயிரிழப்பு

image

முதுமலை பலிகள் காப்பக பகுதியில் உள்ள மாயார் அணை அருகே நேற்று தினசரி ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் அங்கு ஆண் யானை குட்டி இறந்து கிடப்பதை பார்த்தனர். உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு கால்நடை டாக்டருடன் சென்ற வனத்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இது குறித்து விசாரணை செய்கின்றனர்.

News January 26, 2025

கூடலூர் இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்ஷித். நேற்று இரவு யானை தாக்கி உயிர் இழந்ததாக கூறப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்து ஜிம்ஷித் யானை தாக்கி உயிரிழக்கவில்லை என்று கூறியதால், சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிந்து தேவர்சோலை போலீசார் விசாரிக்கின்றனர். உடற்கூறாய்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

error: Content is protected !!