Thenilgiris

News January 28, 2025

நீலகிரிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான கால நிலை நிலவுவதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்களது நாட்டில் நிலவும் அதே காலநிலை இங்கும் நிலவுவதால் மிகுந்த உற்சாகத்துடன் சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்கின்றனர். உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலை மற்றும் படகு இல்லம், போன்ற இடங்களில் அதிக அளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை காண முடிகிறது.

News January 28, 2025

இளைஞருக்கு ஆயுள் தண்டனை

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் வசித்த 14 வயது சிறுமியை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 2020ம் ஆண்டு வீட்டின் அருகில் வசித்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செபாஸ்டின் அருண் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கியுள்ளார். தேவாலா காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நீலகிரி மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து நேற்று குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

News January 28, 2025

ஊட்டி உருளைக் கிழங்கு இன்றைய விலை விவரம்

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தினசரி ஏலத்தின் மூலம் ஊட்டி உருளை கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய ஏலத்தில் ஒரு மூட்டை முதல் ரகம் அதிகபட்சமாக ரூ.1650 க்கும், குறைந்த பட்சமாக ரூ.1000க்கும் விற்பனை ஆனது. இன்றைய ஏலத்தில் மொத்தம் 1200 மூட்டைகள் வரத்தாகின.

News January 28, 2025

கூடலூரில் மர்ம மரணம்: 4 பேருக்கு வலை வீச்சு

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 3வது டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்ஷித்(37). இவர் சில நாட்களுக்கு முன்பு யானை மிதித்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில், வனத்துறை ஆய்வு செய்து மறுத்ததை அடுத்து போலீசார் விசாரணையில், வேட்டைக்கு சென்ற இடத்தில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு நடந்த கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.

News January 28, 2025

நீலகிரி: மலைப்பாதையில் 10 காட்டு யானைகள் 

image

நீலகிரி: குன்னுார் மலைப்பாதையில் இரு குழுவாக பிரிந்து, 10 காட்டு யானைகள் உலா வருகின்றன. இவை தேயிலை தோட்டங்களில் உலா வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், ‘இப்பகுதியில், 10 யானைகள் இரு பிரிவுகளாக உலா வருவதால் தோட்ட தொழிலாளர்கள் மிகவும் எச்சரிகையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலையில் இரவில் வரும் வாகனங்கள் மிதவேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும்’ என்றனர்.

News January 27, 2025

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் மழை முன்னறிவிப்பு பற்றி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் அடுத்த மாதம் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று, நீலகிரியில் கனமழை பெய்யக் கூடும் என முன்னறிவிப்பு செய்துள்ளது. மாறுபட்ட காலநிலை நிலவி வரும் சூழ்நிலையில் கனமழை பற்றிய முன்னறிவிப்பு வந்துள்ளது.

News January 27, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மாதம் ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில், 2025, ஜனவரி மாதத்திற்கான முகாம், பந்தலூர் வருவாய் வட்டத்தில் (29.1.2025) அன்று காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே, பொது மக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

News January 27, 2025

கரூர் அருகே கிணற்றில் மூழ்கி ஊட்டி மாணவர் பலி

image

ஊட்டி லவ்டேல் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் பெரம்பலூர் தனியார் கல்லூரியில் டிப்ளமோ கெமிக்கல் இன்ஜினியரிங் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றவர்கள் கிணற்றில் குளித்த, போது எதிர்பாராத விதமாக ராம்குமார் தண்ணீரில் மூழ்கி இறந்தார். முசிறி தீயணைப்பு படை வீரர்கள் ராம்குமார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நங்கவரம் போலீசார் விசாரணை செய்தனர்.

News January 27, 2025

நீலகிரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 132 மனுக்களை பெற்று கொண்டு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், சீர்மரபினர் நல வாரியத்தில் பதவிப் பெற்ற 06 உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

News January 27, 2025

நீலகிரி: யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை

image

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நேற்று நடைபெற்ற 76வது குடியரசு தின விழாவில் யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியதை சுற்றுலா பயணிகள் பார்த்து பரவசம் அடைந்தனர். நிகழ்ச்சியில் யானைகள் அணிவகுத்து நின்று தேசிய கொடிக்கு தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. இவ்விழாவில் துணை கள இயக்குநர் வித்யா தலைமை வகித்தார்.

error: Content is protected !!