India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (12.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

உதகையில் 150 ஆண்டுகளாக பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைவராக உள்ள இந்த பள்ளியில் விடைத்தாள் வாங்க பணம் இல்லாத காரணத்தால் 10- ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கொதிப்படைய செய்திருக்கிறது. இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பந்தலூர் பெருங்கரை பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், அத்திமாநகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (45), நெல்லியாளம் பகுதியை சேர்ந்த, 14 வயது பெண், டிரைவர் ராஜேந்திரன் (55) ஆகியோர் காயம் அடைந்தனர். மூவருக்கும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்து காரணமாக, உப்பட்டி- பந்தலுார் இடையே 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் அருவங்காடு ஜெகதலா பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதி மக்கள், வெடி மருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை, தொழிற்சாலை நிர்வாகத்தினர் கொரோனா பேரிடர் காலகட்டத்தில் அடைத்து 5 ஆண்டு காலத்திற்கு மேலாகியும் திறக்கப்படவில்லை என்று கூறி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஊட்டி உருளை கிழங்கை தினசரி ஏலத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி இன்று முதல் ரகம் ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.1720 க்கும், குறைந்த பட்சம் ரூ.1310 க்கும் விற்பனை ஆனது. இதில் மொத்தம் 400 மூட்டை விற்பனைக்கு வந்துள்ளன.

சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஐயன்கொல்லி அடுத்து நூல்புழ பகுதியை சேர்ந்த மனு மற்றும் அவரது மனைவி இருவரின் நேற்று தினம் இரவு முதல் காணவில்லை என்று தேடிவந்த நிலையில், அருகே உள்ள வனப்பகுதியில் மனு என்பவரை யானை தாக்கி மரணம் அடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் இவருடன் இருந்த இவரின் மனைவியை வனத்துறை தேடும் பணி ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரியில் வாழும் மலைவேடன் பழங்குடி மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மூத்த மானுடவியலாளர்கள் தமிழ்ஒளி, காளிதாஸ், அமுத வள்ளுவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு விரைவில் தட்டனெரி மற்றும் பன்னிமரம் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு தரும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.

நேற்று GDPயில் கலெக்டர் பேசுகையில், ‘‘ஒவ்வொரு வாரமும் திங்களன்று நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்திட வேண்டும்.அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதோடு, மனுதாரருக்கு சரியான விளக்கத்தினை அளிக்க வேண்டும். மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

பந்தலூர் அருகே அத்திகுன்னா தனியார் எஸ்டேட் பகுதியில் உள்ள கேகே நகரில் சிறுத்தை நடமாடியதைத் தொழிலாளர்கள் பார்த்து வனத்துறையை கூண்டு வைத்து அதை பிடிக்க வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வந்த சிறுத்தை முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி என்பவரின் நாயை கடித்து குதறி, விட்டு சென்று உள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலுாரில் செயல்பட்டு வந்த ஒரு நகைக்கடை புதுப்பிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. இதில் பிரபல நடிகை ரம்யா நம்பீசன் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மேலும், 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க காயின் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.