Thenilgiris

News March 16, 2024

குன்னூர் : வாலிபர் சடலம் மீட்பு

image

குன்னூர் அருகே கோட்டக்கல் செங்குன்ராயர் வனப்பகுதிக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 இளைஞர்கள் சுற்றுலா  சென்றனர். ஒரு இடத்தில் தேனீக்கள் துரத்தியபோது எல்லோரும் ஓடி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அப்போது  ஒருவர் மாயமானதால்  போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இன்று (16/03/24) காலை மாயமான வாலிபரை ட்ரோன் கேமரா மூலம் தேடி கண்டுபிடித்து சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் சடலமாக மீட்டனர்.

News March 16, 2024

நீலகிரி அருகே கூண்டில் சிக்கிய வேட்டை புலி

image

பந்தலூர் மீனாங்காடி பகுதியை சேர்ந்தவர் குரியன். இவரது கொட்டகையில், நுழைந்த புலி, ஆடுகளை வேட்டையாடி சென்றது. புகாரின் பேரில் வனத் துறையினர் கேமரா பொருத்தி புலியை கண்காணித்து வந்தனர். நள்ளிரவு கூண்டில் கட்டியிருந்த ஆட்டு குட்டியை தேடி வந்து வசமாக மாட்டிக் கொண்டது. இதனால் கிராம மக்கள் இன்று (மார்ச் 16) முதல் நிம்மதி அடைந்தனர்.

News March 16, 2024

உதகையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறும். எனவே விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை தோட்டக்கலை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72  உதகை 643001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் கூட்டம் நடைபெறும்போது விவசாயிகள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

ஊட்டி பூங்காவில் பயணிகளுக்கு தடை

image

உதகை பூங்காவில் நடப்பாண்டு கோடை விழாவை முன்னிட்டு 5 லட்சம் மலர் நாற்று தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பூங்காவின் பிரதான புல் மைதானத்தில், காலை, மாலை நேரங்களில் ஸ்பிரிங்ளர் உதவியுடன் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க புல் மைதானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.