India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட எஸ்பி நிஷா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக மேற்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் பாதையில் கல்லாரில் இருந்து ஆடர்லி இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு ரயில் சேவை மீண்டும் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதுமலை மசினகுடி சீகூர் வன சரகம் வனப்பகுதி ஆற்றில் யானை உயிரிழந்து இருப்பதாக நேற்று வந்த தகவலை அடுத்து , வனத்துறை துணை இயக்குநர் அருண்குமார், வனச்சரகர் தயானந்தன் உள்ளிட்டோர் விரைந்தனர். கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார். இதையடுத்து, ” இரு யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் ஒரு யானை பலியானதாக” வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோத்தகிரி சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என தமிழக அரசு சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான தீர்மானம் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது அருகிலுள்ள 4 கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக மாற்ற தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஊட்டி மாநகராட்சியாக தரம் உயரும் நிலையில், கோத்தகிரி நகராட்சியாக மாறுவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் குன்னூர் சட்டமன்றத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கா, ராமச்சந்திரன் அமைச்சர் பதவியில் இருந்து விடிவித்தது பின்னர் தமிழக அரசின் தலைமை கொறடாவாக கா. ராமச்சந்திரன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் நீலகிரி மாவட்டத்தை சார்ந்த மாவட்ட செயலாளர் பா.மு, முபாரக் அவர்கள் தலைமை கொறடாவாக இருந்தது குறிப்பிடத்தக்து.
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம், நீலகிரி எஸ்பி என்.எஸ். நிஷா நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தேசன்ராஜ் என்பவர் நீலகிரி மாவட்டம் கேத்தி அரக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாய பணி செய்து வருகிறார். இவர் மற்றும் இவரது மனைவி இருவரும் இன்று தோட்ட வேலைக்கு சென்ற நிலையில், அவர்களது 2 மகள்கள் விளையாடி கொண்டு இருந்துள்ளனர். அதில் 1 1/2 (ஒன்னரை) வயது மகள் அருகில் இருந்த குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து கேத்தி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா தேவாலா பகுதியில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்றவரை, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்றது. இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் சாலையில் கிடைப்பதை கண்ட பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர் அருகே சோலாடி பகுதியில், 300க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் 4 கி.மீ., தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி நடைபெறும் தருவாயில் வருவாய் துறை அதிகாரிகள் செக்சன்-17 என்று பணியை தடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கட்டுமான பணி தொடரவேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
சேரம்பாடி அருகே நேற்று முன்தினம் குஞ்சு முகமது என்பவர் யானை தாக்கி உயிரிழந்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சேரம்பாடி பகுதியில் முகாம் இட்டுள்ள காட்டு யானைகளை, கும்கி யானைகள் மூலம் விரட்ட நேற்று 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இன்று காலை முதல் யானைகளை துரத்தும் பணியில் கும்கி யானைகள் ஈடுபடுகின்றன.
Sorry, no posts matched your criteria.