India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரியில் தேர்தல் பரப்புரை செய்ய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (4.4.24) ஊட்டி வருகிறார். நாளை காலை ஊட்டி ஏடிசி திடலில் அதிமுக சார்பாக நடக்கும் பொது கூட்டத்தில் வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை அறிமுகம் செய்து வைக்கிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலர் வினோத், சாந்தி ராமன் ((Ex. MLA) உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்துக்கு கூடுதலாக தேவைப்படும் 240 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து நேற்று எடுத்து வரப்பட்டது. இவைகள் மாவட்ட கலெக்டரின் கூடுதல் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று(ஏப். 3) பார்வையிட்டார்.
குன்னூர் அருகே கேத்தி பாலாடா பகுதியில் 10 கிராமங்களில் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.இராசா இன்று (ஏப்ரல் 3) காலை 10.30 மணியளவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், திமுக தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உடன் சென்றனர்.
நீலகிரி தொகுதிக்கு கூடுதலாக தேவைப்படும் 240 வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் கெளசிக் உடன் உள்ளார்.
கூடலூர் சேரம்பாடி கண்ணம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி பதற்றமானது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதை நேற்று (ஏப்ரல் 2) நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, எஸ்பி சுந்தரவடிவேல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
ஊட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்லட்டி பகுதியில் நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று மாலை உதய சூரியன் சின்னத்திற்கு வாகனம் மீது நின்றபடி ஓட்டு கேட்டார். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து இருப்பதாக சுற்றுலா துறை மந்திரி ராமசந்திரன் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் உடன் இருந்தார்.
தமிழக கவர்னர் ஆர்.என் ரவி தனது குடும்பத்துடன் ஊட்டி ராஜ்பவனில் தங்கி வருகிறார். நேற்று (ஏப். 2) இவர் குடும்பத்துடன் ஊட்டி ரயில் நிலையம் சென்றார். பின்னர் குடும்பத்துடன் ரயிலில் ஏறி, குன்னூர் சென்றார். கவர்னர் வருகையை ஒட்டி ஊட்டி மற்றும் குன்னூர் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் பெரும்பாலும் பள்ளி தேர்வுகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் கோடைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், காட்டேஜ்-களில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாதரணமாக ரூ.750 வசூலிக்கப்படும் அறைகள் தற்போது ரூ.1500 வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தேர்தலுக்கு பிறகு சீசன் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குன்னூர், மலை ரயில் நிலையத்தில், சீசனை ஒட்டி, போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல் ஒலி பெருக்கி மூலம் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மலை ரயில், குகைகளை கடக்கும்போது தங்களது மொபைல் போன்களை தவற விடாதீர்கள் எனக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
நீலகிரி மலை ரயிலில் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் விரும்பி பயணிக்கிறார்கள். அப்படி வருபவர்கள் ரயில் முன் நின்று, போட்டோ எடுப்பது வழக்கம். ஆனால் இன்று காலை குன்னூர் ரயில் நிலையத்தில் புகைப்படம் எடுக்க தடை விதித்து விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் இந்த அறிவிப்பு, பயணிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.