Thenilgiris

News April 6, 2024

நீலகிரி: ரூ.6,000 லஞ்சம் கேட்ட விஏஓ கைது

image

ஊட்டி அருகே கம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவருக்கு 6.5 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது. சிட்டாவில் பெயர் சேர்க்க விஏஓ கற்பகம் என்பவரை அணுகி உள்ளார். அவர் ரூ.6,000 லஞ்சம் கேட்கவே, ஜெய்கணேஷ் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார், பணம் கொடுக்கும்போது கையும் களவுமாக விஏஓ மற்றும் டிரைவர் ஆகிய 2 பேரை பிடித்து கைதுசெய்தனர்.

News April 5, 2024

ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

image

நாடாளுமன்ற தேர்தலில் பணப்புழக்கம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், நீலகிரி தேர்தல் பறக்கும் படையினர் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தி வருகின்றனர். குன்னூர் தனியார் பள்ளிக்கு வந்து இறங்கிய ஹெலிகாப்டர் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. நேற்று ஹெலிகாப்டரை சுற்றி வளைத்து சோதனையில் ஈடுப்பட்டனர். சோதனையில் ஏதும் கிடைக்கவில்லை என்றனர்.

News April 5, 2024

குன்னூர் : வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம்

image

குன்னூர் புனித அந்தோணியார் தொழிற்பயிற்சி  மையத்தில்  குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் இன்று (5 தேதி ) நடைபெற்றது. முதல்வர் ஆனந்த் தலைமை தாங்கினார். சங்க தலைவர் மனோகரன்  பேசும்போது
‘ ஓட்டுக்கு காசு வாங்குபவர்கள் சுயமரியாதையை இழக்கிறோம் என்பதை புரிந்து  கொள்ளுங்கள் ‘ என்றார். கூட்டத்தில் அனைவரும் தேர்தலில் ஓட்டு போடுவதாக உறுதிமொழி ஏற்றனர்.

News April 5, 2024

பயப்படாமல் ஓட்டு போடுங்கள்: போலீஸ்

image

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு, ‘நாங்கள் இருக்கிறோம் பயப்படாமல் ஓட்டு போடுங்கள் ‘ என்பதை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில், கூடலூர் பஜாரில் நேற்று (ஏப். 4) போலீஸ் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. கூடலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்த குமார் தலைமை தாங்கினார்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

எடப்பாடி பழனிசாமி வாகனம் சோதனை

image

நீலகிரி ஊட்டி தேர்தல் பிரச்சாரத்துக்கு (ஏப். 4) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார். குன்னூர் அருகே காட்டேரியில் இவரது வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனையில் ஒன்றும் கிடைக்காததால் அவரது வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. சோதனையின்போது கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

News April 4, 2024

உதகையில் பாஜக தேர்தல் வழி காட்டுதல் கூட்டம்

image

உதகையில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மண்டல் தலைவர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் வழிகாட்டுதல் கூட்டம் இன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தலைவர் எச். மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் உரை நிகழ்த்தினார்.
உதகை தொகுதி அமைப்பாளர் ராமன், மாவட்ட பொது செயலாளர் பரமேஸ்வரன், மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 4, 2024

பட்டாசு வைத்த திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு

image

குந்தா, மஞ்சூரில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வருகையை ஒட்டி சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவரை வரவேற்கும் விதமாக, தேர்தல் விதியை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில், மட்டக்கண்டி திமுக பிரமுகர் சதீஷ்குமார் என்பவர் மீது மஞ்சூர் போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

தேர்தல் பொது பார்வையாளர் தலைமையில் கூட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக அரங்கில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி  பொதுத்தேர்தல் முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கணினி மூலம் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள் இன்று நடைபெற்றது. நீலகிரி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித் சிங் பரார் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா முன்னிலையில் நடைபெற்றது.