Thenilgiris

News April 9, 2024

ஒரு வாக்குச்சாவடி: 2 வாக்குப்பதிவு எந்திரம்

image

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பிரபல கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 16 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். ஒரு எந்திரத்தில் 16 பொத்தான்கள் இருக்கும் இறுதியில் உள்ள ஒரு பொத்தான் நோட்டாவிற்கு ஒதுக்கப்படும் இந்நிலையில் மாவட்டத்தில் வேட்பாளர்கள் அதிகமானதால் 2 எந்திரங்கள் வாக்குப்பதிவில் மாவட்டம் முழுவதும் பயன்படுத்தப்பட உள்ளது.

News April 9, 2024

குன்னூரில் இந்திய ராணுவ தலைமை தளபதி

image

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு நேற்று (ஏப்.8) இந்திய நாட்டின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே வந்தார். அங்கு நட்பு நாடுகளின் முப்படை உயரதிகாரிகளிடம் பேசுகையில், தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ சவால்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ மேம்பாடு குறித்து விளக்கினார். இராணுவ கல்லூரி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் வரவேற்றார்.

News April 8, 2024

அவலாஞ்சி அணை வறண்டு போகும் அபாயம்

image

 உதகையில் இருந்து 35 கிமீ தொலைவில் அவலாஞ்சி அணை உள்ளது . இந்த அணை நீர்  மின்சாரம் உற்பத்திக்கு உதவியாக உள்ளது.  இந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்தது. அதனால் அணையில் குறைந்த அளவு நீர் மட்டம் இருந்தது. அதன் பிறகு 6 மாதங்களாக மழை இல்லை. சுட்டெரிக்கும் வெயில் கொளுத்துகிறது. அணைக்கு ஊற்று நீர் வரத்து  இல்லை.  இதனால் அணை வறண்டு போகும் அபாய கட்டத்தில் உள்ளது.

News April 8, 2024

ஆ.ராசாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

image

நீலகிரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஆ.இராசாவை ஆதரித்து கீழ்கோத்தகிரி ஒன்றியம், கைகாட்டி பகுதியில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான கா.ராமசந்திரன் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். அப்போது, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து ஆ.ராசாவை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

News April 8, 2024

நீலகிரி: மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

image

இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மிகவும் சிறப்புமிக்கது. இந்த மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் 30 நாட்கள் உணவு உண்ணாமல் தங்களது இறை நம்பிக்கையையும் ஈகை குணத்தையும் வெளிக்காட்டுவர், அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் மேல் கூடலூர் நூருல் இஸ்லாம் பள்ளிவாசல் கமிட்டி சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள், கிறிஸ்தவ ஆலய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News April 7, 2024

விதிமுறை மீறல், அதிமுக நிர்வாகி மீது வழக்கு

image

ஊட்டி, (EPS) தேர்தல் பிரச்சாரத்தின் போது வந்தவர்களுக்கு, ரூ.300 வீதம் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததாக பறக்கும் படைக்கு புகார் அனுப்பினர். அந்த புகாரின் பேரில் தேர்தல் ஆணைய பறக்கும் படை மற்றும் செலவின கண்காணிப்பு குழுவினர் நேற்று (ஏப். 6) ல் ஒன்றிய செயலாளர் பெள்ளியிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.

News April 7, 2024

வெடிகுண்டு கருவி மூலம் தீவிர சோதனை

image

நீலகிரி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அறிவுறுத்தலின்படி, கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் தனிப் படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக,பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள்,சந்தேகத்துக்குரிய நபர்கள், உள்ளூர், வெளியூர் வாகனங்களை வெடி குண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>-1<<>> என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 6, 2024

பூத் வாரியாக பாஜக வாக்கு சேகரிப்பு

image

கோத்தகிரியில் பாஜகவினர் பூத் வாரியாக மக்களவை வேட்பாளர் டாக்டர் எல்.முருகனுக்கு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று (ஏப். 6) 54 வது பூத்துக்கு உட்பட்ட தர்மோனா பகுதியில் கிளை தலைவர் நடராஜ் தலைமையில் வாக்கு சேகரித்தனர். கோத்தகிரி நகர தலைவர் ஹால்தொரை , பிரதீஷ், தியாகராஜ், விக்ரம், சத்திய சிவன், சம்பத் உடன் சென்றனர்.

News April 6, 2024

நீலகிரி: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.