India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோடை கால நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஊட்டிக்கு செல்லும் மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.25-க்கு தள்ளி வைத்துள்ளது.

உதகை பேரார் பகுதியில் அருகே தேயிலை பறிக்கச் சென்ற இடத்தில் வனவிலங்கு தாக்கி அஞ்சலை என்பவர் உயிரிழந்துள்ளார். அஞ்சலையின் உடலை மீட்டு உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அஞ்சலையை கொன்ற புலியை பிடிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

உதகைக்கு வரும் வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி உதகைக்கு வார நாளில் 6000, வார இறுதியில் 8000 வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அரசுப்பேருந்துகள், ரயில்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு கிடையாது. உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. இந்த கட்டுப்பாடுகள் ஜூன் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க, நீலகிரி நுாலகத்தில், இலக்கியம், கலாசாரம் மற்றும் அறிவுசார் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக நாளை, 14ம் தேதி இலக்கிய விழா துவங்கி, 2 நாட்கள் நடக்கிறது.
அதில், அரசியல், வரலாறு, சினிமா, இசை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் புகழ் பெற்ற, 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. மேலும் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்: உதகை 32 மி.மீ, குன்னூர் 55 மி.மீ, குந்தா 58 மி.மீ, கோத்தகிரி 45 மி.மீ, பர்லியாறு 43 மி.மீ.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர்.

குன்னூர் பகுதியை சேர்ந்தவர் காஜா. இவர் சொந்தமாக தொழில் தொடங்கி, வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிரபல தனியார் ஆன்லைன் நிறுவனத்திடம் டிரிம்மிங் மிஷின் ஆர்டர் செய்துள்ளார். நேற்று அவர் பார்சலை பிரித்தபோது ஜல்லிக்கற்கள் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

குன்னூர் அருகே உள்ள உபதலை ஊராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் சொகுசு விடுதிக்கு ஊராட்சி அலுவலர்கள் நேற்று சீல் வைத்தனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரிமரா ஹட்டி பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு நேற்று விதிமுறை மீறி அனுமதியின்றி இருந்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

நீலகிரி, இளைஞர்களுக்கு வேலை திறன்களை வளர்த்துகொள்ள PM Internship Scheme திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிற்பயிற்சி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் டிகிரி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இங்கே <

நீலகிரி,ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை நீக்கி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தும் பள்ளிகள், கல்லூரிகள் வணிக நிறுவனங்களுக்கு இந்த பரிசு வழங்கப்படவுள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2வது பரிசாக ரூ.5 லட்சம், 3வது பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.விண்ணப்ப படிவங்களை https://nilgiris.nic.in/ta/ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.