Thenilgiris

News November 9, 2024

பேசும் படம்: நீலகிரியில் தாயை பிரிந்த ஏக்கம்

image

பந்தலூர் வயநாடு மானந்தவாடி அருகே தோல்பட்டி வனப்பகுதியில், நேற்று மாலை யானை குட்டி ஒன்று சாலையில் உலா வந்தது. பஸ் உள்ளிட்ட வாகனங்களின் பின்னால் ஓடிச் சென்றது. வாகன ஓட்டுநர்கள் யானை குட்டிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வாகனங்களை மெதுவாக இயக்கினர். தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து குட்டி யானையை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். தாயுடன் சேர்த்திட முயற்சி நடைபெற்றுவருகிறது.

News November 9, 2024

தலைமைத் தேர்தல் அதிகாரி ஆனார் நீலகிரி Ex கலெக்டர்

image

நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 15.03.2010 அன்று நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்ற அர்ச்சனா பட்நாயக் 10.10.2013 வரை ஆட்சியராக பணியாற்றினார். எனவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

News November 9, 2024

முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க கடைசிநாள்!

image

நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட செய்தியில், பி.பார்ம் /டி.பார்ம் சான்று பெற்றவர்கள் & அவர்களின் ஒப்புதலுடன் இணையதளத்தில் www.mudhalvarmarundhagam.tn.gov.in நவ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 110 சதுர அடி இடம், சொந்த வீடு, சொத்துவரி, குடிநீர், மின் இணைப்பு ரசீது வேண்டும்.

News November 8, 2024

ஊட்டிக்கு செல்ல இ-பாஸ் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி

image

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்ல இ-பாஸ் பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்துவதற்கு அல்ல என தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் குறித்த உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்கவும் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

News November 8, 2024

ஆதரவற்றோர் இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு

image

நீலகிரி மாவட்டத்தில் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்களில் முதியோர்கள் சரியாக கவனிக்கப்படுகிறார்களா? அடிப்படை வசதிகள் உள்ளனவா? போன்றவற்றை அறிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று உதகை அருகே முள்ளிக்கொரையில் உள்ள அன்பு அறிவு அறக்கட்டளை இல்லத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.

News November 8, 2024

உதகை: கந்த சஷ்டி விழாவில் பக்தி சொற்பொழிவு

image

நீலகிரி மாவட்டம், உதகை, நஞ்சநாடு அருகே குருத்துக்குளி கிராமத்தில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. லட்சுமணன், சிவா குழுவினரின் பஜனை நடைபெற்றது. திருமதி ஜானகி போஜன் பக்தி சொற்பொழிவு நிகழ்த்தினார். குருத்துக்குளி ஊர் தலைவர் எஸ்.ராமன் தனது 94 வயதில் குழந்தைகளுடன் பாடலுக்கு நடனமாடினார். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. வானவேடிக்கை நடந்தது. ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News November 8, 2024

நீலகிரி: BSNL சேவை கடுமையான பாதிப்பு

image

நீலகிரி மாவட்டம் முழுவதும் பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் அதிகமாக உள்ள நிலையில் தொலைதொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்றத்தின் சந்தாதாரர்கள் தவிப்புடன் உள்ள நிலை, மழை காலங்களில் பாதிப்பு குறித்தும் தகவல் பரிமாற முடியாத நிலை தொடர்வதால், உடனடியாக மாவட்டத்தில் BSNL சேவையை சிக்கலின்றி தொடர நடவடிக்கை அவசியம் என பொதுமக்கள் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையில் கோரிக்கை வைத்துள்ளனர்.

News November 8, 2024

குன்னூரில் ஆபத்தான மரங்கள் அகற்றம்

image

குன்னூர் வெலிங்டன் பகுதியில் கடந்த வாரம் வாடகை கார் மீது ராட்சத மரம் விழுந்து ஜாகீர் உசேன் என்ற ஓட்டுனர் அதே இடத்தில் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து ராணுவ நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அப்பகுதியில் 206 ஆபத்தான மரங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, அவைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.

News November 7, 2024

உதகை உருளைக்கிழங்கு ஏல நிலவரம்

image

நீலகிரி கூட்டுறவு விற்பனைச்சங்கம் சார்பில், மேட்டுப்பாளையம் ஏல மண்டியில் இன்று ஊட்டி உருளைக்கிழங்கு ஏலம் நடைபெற்றது. இதில் ராசி வகை உருளைக்கிழங்கு மூட்டைக்கு அதிகப்பட்சமாக ரூ.2,330க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,430க்கும் ஏலம் போனது. பொடி உருளைக்கிழங்கு அதிகப்பட்சமாக ரூ.1,060க்கும், குறைந்தபட்சமாக ரூ.500க்கும் ஏலம் போனது. 1700 மூட்டை உருளைக்கிழங்கு இன்றைய ஏல விற்பனைக்கு வந்தது.

News November 7, 2024

அதிகாலை நேரத்தில் விவசாய நிலத்தில் யானை

image

கூடலூர் தொரப்பள்ளி அருகே குனியல் வயல் பகுதி விவசாயிகள் பல ஏக்கர் நிலங்களில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். யானைகளிடமிருந்து நெல் விவசாயத்தை பாதுகாக்க இரவு முழுவதும் விவசாயிகளும், வனத்துறையினரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் இரவு நேரங்களில் விவசாய நிலத்திற்கு வராத யானைகள் இன்றைய தினம் அதிகாலை 6 மணி அளவில் விவசாய நிலத்திற்கு புகுந்து நெல் பயிர்களை சேதப்படுத்தியது.

error: Content is protected !!