India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, நீலகிரியில் நாளை (மே 9) இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பராமரிப்பில்லாத கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட சுகாதார இணை இயக்குநர் பொதுப்பணித்துறை அலுவலர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை ஓரிரு வாரத்தில் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு காலை 11 மணிக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் காலையில் வராமல் மதியம் 2.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் வந்து இறங்கிய முதலமைச்சர் ஏவ்லாக் ரோட்டில் உள்ள தனியார் பங்களாவுக்கு சென்றார். இங்கு 5 நாட்கள் தங்கியிருந்து தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக தெரிகிறது.
நீலகிரி மாவட்டத்தின் முக்கூர்த்தி மலையிலிருந்து அழகிய மலைகளைக் கடந்து வருகிறது பைகாரா நதி. இப்பகுதியின் பூர்வ பழங்குடி மக்கள் இந்த நதியை புனித நதியாக கருதுகின்றனர். இப்பகுதியில் உள்ள பல நீர்வீழ்ச்சிகள் வருகின்றன. இதில் ஒன்று 55 மீ உயர்த்திலும், இன்னொன்று 61 மீ உயரத்திலும் இருந்து விழுகின்றன. இங்கு படகு சுற்றுலாத் தலமும் உள்ளது. இயற்கை காதலர்களுக்கு, அமைதியாக இயற்கையை ரசிக்க பொருத்தமான இடம் இது.
கோத்தகிரியிலிருந்து குன்னூர் நோக்கிச் சென்ற வாடகை கார் வளைவில் திடீரென நிலைதடுமாறி வண்டிச்சோலை அருகே உள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்தக் காரில் வந்த பயணிகள் உயிர் இழந்திருக்கலாம் என்ற பயத்தில் டிரைவர் தப்பி ஓடினார். கவிழ்ந்த காரில் இருந்தவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு நேற்று அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா இன்று ஹெலிகாப்டரில் ஊட்டி வருகிறார். காலை 12 மணிக்கு ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் இறங்குகிறார். வரும் 11ஆம் தேதிவரை ஊட்டியில் ஓய்வு எடுக்கிறார். கர்நாடகா தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான கர்நாடகா பூங்காவை பார்வையிடுகிறார். இவரது வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 38 அரசு பள்ளிகளில் 2.778 மாணவர்கள் 3.311 மாணவிகள் என மொத்தம் 6.089 பேர் தேர்வு எழுதினர். நேற்று பிளஸ் +2 தேர்வு முடிவு வெளியானது. இதில் 2,536 மாணவர்கள், 3,204 மாணவிகள் என மொத்தம் 5740 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் 94.27 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் நீலகிரி 22வது இடத்தை பிடித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று(மே 7) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் பாரபட்சமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை சிறிது இளைப்பாற வைக்கிறது. அதன்படி இன்று நீலகிரி உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு இன்று
(மே 7) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்று வர வேண்டும். இதன் அடிப்படையில் நீலகிரிக்கு சுற்றுலா பேருந்து, கார், ஜீப், பைக் வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் வருவதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து 21,446 பேர் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.