India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோத்தகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில், சமவெளிப் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி தங்கி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர்களின் 11 வயது மகளிடம், அப்பகுதியில் இருந்த முகேஷ் குமார்(23) என்ற வட மாநில தொழிலாளி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் முகேஷ் குமாரை, போக்சோவில் கைது செய்தனர்.

நீலகிரி மக்களே, ஜிப்லி(Ghibli) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.

நீலகிரி மாவட்டத்தில் பட்டதாரி படிப்பு முடித்த இளைஞர்களுக்கு பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் உடனடி வேலை வாய்ப்புள்ளது. ஊட்டி, கூடலூர் போன்ற இடங்களில் இதற்கான பணியிடம் இருக்கக் கூடும். இந்த வேலைக்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. நடப்பாண்டில் படித்து முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். ரூ.15000 வரை சம்பளம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு<

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 67 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் வரும் ஏப்.,21ஆம் தேதி வரை <

நீலகிரி மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)

ஊட்டி வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தில் கள ஆய்வு நடைபெற உள்ளது. இதில், மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட உயர்நிலை அலுவலர்கள் வருவாய் கிராமங்கள் வாரியாக கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்கிறார்கள், ஆய்வு மேற்கொள்ளும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கான மனுக்களை அளிக்கலாம்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 30 காலிபணியிடங்கள் உள்ளன. மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த பணிகளுக்காக இங்கு கிளிக் செய்து உடனே விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள் .

ஊட்டி ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 -25ஆம் ஆண்டு 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டியல் பயிற்சி சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிக்கு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வரும் 16ம் தேதி முதல் www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் மே 6ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிறுவனங்கள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் விதிகள் படி, நீலகிரியில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். மே மாதம், 15ம் தேதிக்குள் 100% தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்க விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (13.04.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.