India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற போலீசார் ஒருவரை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பொன்வண்ணன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான போடி கைலாய கீழ சொக்கநாதர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் வரும் அம்மாவாசை பௌர்ணமிகளில் இக்கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இக்கோயில் 2000 ஆண்டுகள் தொன்மையானது. ஐந்து தலை நாகம் ஒன்று கோயிலை பாதுகாத்து வருவதாகவும் ஐதீகம்.

தேனி பழனிசெட்டிபட்டி ஆசிரியர் காலனி ஆனந்தரூபன் 32. டிப்ளமோ இன்ஜினியர். இவர் எஸ்.பி.,சிவபிரசாத்திடம்அளித்த புகாரில், ‘தேனியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் நிறுவன மேலாளர் குமார். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் ரூ.8.20 லட்சம் வாங்கினார். ஓராண்டு ஆன பின்பும் அனுப்பவில்லை.கொடுத்த பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றினார் இது போல் நால்வரிடம் ரூ.22.85 லட்சம் மோசடி செய்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று 28.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Social Worker பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்யும் இடம் தேனி. விண்ணப்பிக்க கடைசி நாள் 10-04-2025. தகுதியான நபர்களுக்கு Rs.18,536 வரை சம்பளம் கிடைக்கும். விண்ணப்பிக்க இங்கே <

தேனி, ஆண்டிபட்டி காவல் நிலையம் போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (மார்.27) ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது மதுரை சாலையில் பைக்கில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த முருகன், தெய்வேந்திரன் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பைக்கில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 15,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

மேலக் கூடலூரிலிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மாலையம்மன் கோவில். இந்தக் கோவிலில் வீரன் ஒருவன் வில்லுடன் அம்பைப் பிடித்து எய்த வண்ணம் உள்ள 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்று உள்ளது. வரலாற்றைச் சுமந்து நிற்கும் இந்த நடு கல்லை நேற்று மார்ச் 27 பிற்பகல் தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.

தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 28) நீர்மட்டம்: வைகை அணை: 58.45 (71) அடி, வரத்து: 43 க.அடி, திறப்பு: 722 க.அடி, பெரியாறு அணை: 112.95 (142) அடி, வரத்து: 12 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 31 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 66.91 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 34 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாகவுள்ள சமூகப்பணியாளர் பணியிடத்தினை ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அணுகி பயன் பெற்றுக் கொள்ளலாம் என தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தேனியில் புத்தக திருவிழா மார்ச் 23ல் துவங்கியது. தினமும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நடந்து வருகிறது. புத்தக திருவிழா மார்ச் 30ல் நிறைவு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் புத்தக திருவிழாவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து புத்தக திருவிழாவை ஏப்.,1 வரை நீட்டித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
Sorry, no posts matched your criteria.