Theni

News November 3, 2024

பெரியகுளம் உழவர் சந்தை விலை நிலவரம்

image

பெரியகுளத்தில் உள்ள உழவர் சந்தையில் (நவ. 3) இன்றைய விலை நிலவரம். (1 கிலோ) தக்காளி ரூ.30-35, உருளைக்கிழங்கு ரூ. 45-50, சின்ன வெங்காயம் ரூ. 50-55, பெரிய வெங்காயம் ரூ. 50-62, மிளகாய் ரூ.35-40, கத்தரி ரூ.20-25, வெண்டை ரூ. 18-20, முருங்கை ரூ. 30- 35, புடலை ரூ. 22-25, முள்ளங்கி ரூ. 36, சுரைக்காய் ரூ.12-14, கேரட் ரூ. 60, பீன்ஸ் ரூ. 45 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News November 3, 2024

தேனியில் கனமழை வானிலை மையம் தகவல்

image

தமிழகத்தில் இன்று மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் தென் தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் இடி,மின்னலுடன் மழை பெய்யலாம்.

News November 2, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 2, 2024

தேனி பெற்றோருக்கு மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 2 பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் விண்ணப்பிக்கலாம். 18 வயதிற்கு மேல் இத்திட்டத்தின் முதிர்வு தொகையை எடுத்து அவர்களின் கல்விச் செலவு, திருமண செலவிற்கு பயன்படுத்தலாம். இத்திட்டத்தில் பயன்பெற உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

News November 2, 2024

கோ-ஆப்டெக்சில் நவ.31 வரை தள்ளுபடி நீட்டிப்பு

image

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரக்கூடிய கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி முடிந்த நிலையிலும், தீபாவளி தள்ளுபடி விற்பனை நவ.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு எடுக்கக்கூடிய ஆடைகளுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகின்றது. கோ-ஆப்டெக்சில் தீபாவளி இலக்காக ரூ.70 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. தற்பொழுது தீபாவளி வரை ரூ.46 லட்சத்திற்கு ஆடைகள் விற்பனை ஆகியுள்ளன.

News November 2, 2024

இலவச தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 -க்கும் குறைவாக இருக்க வேண்டும். 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2024

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தேனி எம்.பி

image

நேற்று முன்தினம் கம்பம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலை விபத்தில் இறந்த 3 இளைஞர்களின் குடும்பத்திற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி அரசு உதவிகள் கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி கூறினார். இதில் மாநில தி.மு.க. மாவட்ட செயலாளர் V.S.K. ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் துரை நெப்போலியன், தெற்கு நகர துணை செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

News November 2, 2024

ரயில் பயணக் காதலனை திருமணம் செய்ய போலீஸ் உடை அணிந்த தேனி பெண் கைது

image

தேனி வடுகபட்டியை சேர்ந்தவர் அபிபிரபா இவர்க்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மகன் உள்ள நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்தார். இந்நிலையில் தற்போது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்க்கு ரயிலில் திருவனந்தபுரம் சென்றார் அப்போது குமரியை சேர்ந்த சிவா என்றவர் அறிமுகம் கிடைக்கிறது. அவர் வீட்டை ஏமாற்றுவதற்கு போலீஸ் உடை அணிந்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

News November 2, 2024

நீரில் மூழ்கிய இளைஞரின் உடல் மீட்கப்பட்டது

image

பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் பிரகாஷ், ஜவஹர் உட்பட 5 பேர் ஒன்றிணைந்து தீபாவளி கொண்டாடினர். நேற்று காமக்காபட்டி அருகே ஒத்தவீடு வைகை அணை நீர்தேக்கப் பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினார். இந்நிலையில் அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில், இன்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது. 

News November 1, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 1.11.2024 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!