Theni

News February 5, 2025

உடல் நலக் குறைவால் தம்பதியினர் தற்கொலை

image

தேனி, கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த மதியழகன் மகன் மனோஜ் (32). இவர் தீபிகா என்பவரை(30) கடந்த 2014-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தாா். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மனோஜுக்கும், தீபிகாவுக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த தம்பதியினர் நேற்று (பிப்-4)  வீட்டில் விஷம் குடித்தனா். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

News February 4, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 04.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 4, 2025

தேனியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

image

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இன்று மாலை அங்கு அறப்போராட்டம் நடத்த போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தேனியில் பாரதிய ஜனதா கட்சியினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினரால் கைது செய்து மினி பஸ்ஸில் ஏற்றினர்.

News February 4, 2025

மதுரை – போடி இன்று முதல் மின்சார ரயில்

image

மதுரை – போடி இடையிலான ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது.இதையடுத்து இன்று (பிப். 4) முதல் சென்னை சென்ட்ரல் – போடி – சென்னை சென்ட்ரல் (20601/20602), மதுரை – போடி பாசஞ்சர் (56701/56702) ஆகிய ரயில்கள் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மின்சார ரயில் வருவதினால்பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News February 3, 2025

கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் தகவல்

image

தேனி மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் படை வீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையில் உறுதி செய்திடவும் அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் படை வீரர்கள்  கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News February 3, 2025

புகழாரம் சூட்டிய தேனி எம்.பி. தங்க தமிழ் செல்வன்

image

சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தி, தமிழ்நாட்டு மக்களைத் தலைநிமிர்ந்து நடைபோக வித்திட்ட நம் பேரறிஞர் அண்ணா 56-வது நினைவு நாளில் அண்ணாவின் கொள்கைகளை வென்றெடுப்போம் என உறுதி ஏற்போம் என்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் புகழாரம் சூட்டினார். மேலும் #RememberingAnna என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.

News February 3, 2025

தேனி நகராட்சிக்கு அபராதம்; கோர்ட் உத்தரவு 

image

தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கக்கன்ஜீ காலனியை சேர்ந்தவர் அமர்நாத். இவர் 2021ல் வீட்டு மனை ரசீது கேட்டு ரூ.300 செலுத்தி விண்ணப்பித்திருந்தார். ரசீது வழங்கவில்லை.நகராட்சிக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டில் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ரசீது 1 மாதத்திற்குள் தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News February 3, 2025

மாநில அளவில் சிலம்பம்: தேனி பள்ளி மாணவர்கள் சாதனை

image

மயிலாடுதுறை செம்பனார்கோவில் தாமரை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் குடியரசு தின விழா மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் தேனி கம்மவார் மெட்ரிக் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் ஹரி பிரசாத், தேனி நாடார் மெட்ரிக் பள்ளி 8ம் வகுப்பு மாணவி இருவரும் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தனர். இருவரையும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.

News February 2, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 02.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 2, 2025

மதுரை – போடி மின்சார ரயில் இன்று சோதனை ஓட்டம்

image

மதுரையில் இருந்து போடி வரை ரயில்வே பாதை மின் மயமாக்கும் பணி நிறைவு பெற்று இன்று(பிப்.2) மதுரை (டூ) போடி, போடி (டூ) மதுரைரயில் சோதனை ஓட்டம் இன்று காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் நடக்கிறது. இதற்காக தண்டவாளங்களில் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின் வயர்களில் 25ஆயிரம் வோல்ட் மின்சாரம் செல்வதால் பொதுமக்கள் தண்டவாளங்களை கடக்கும் போது கவனமுடன் கடந்து செல்ல ரயில்வே துறை அறிவுறுத்தி உள்ளது.

error: Content is protected !!