India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், பாடத்திட்டங்கள் மற்றும் அது குறித்த சந்தேகங்களுக்கு இனி எங்கும் தேடி அலைய தேவையில்லை. TNPSC, TNUSRB, TRB மற்றும் RRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்களை, மென் பாடக்குறிப்புகளாக அரசு இணையத்தில் பதிவேற்றியுள்ளது. இனி பாடத்திட்டங்களை <

தேனி மக்களே, திருச்சி பெல் நிறுவனத்தில் மூன்று விதமான Apprentice பணியிடங்களுக்கு 760 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் தகுதியானவர்கள். 15.09.2025 ம் தேதிக்குள் இந்த <

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சந்தனகுமார். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் உணவு வாங்க சென்றுள்ளார். அங்கு புரோட்டா மாஸ்டர் சிவா கொத்து புரோட்டா போட்ட நிலையில் எரிச்சல் ஊட்டும் வகையில் ஏன் சத்தமாக கொத்து புரோட்டா கொத்துகிறார் என சந்தனகுமார் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சிவா சந்தனகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியில்(RBI) கிரேடு B ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 120 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து செப்.30 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேனி மாவட்டத்தில் வங்கி, போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

தேனி மாவட்டத்தை சார்ந்த, முன்னாள் படைவீரர்கள் சிறப்புக் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 10.09.2025 ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியில் பணிபுரியும் வீரர்களை சார்ந்தோர்களுக்கு கோரிக்கைகள் ஏதுமிருப்பின், தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனு மற்றும் அடையாள அட்டை நகலுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், உத்தமபாளையம் தாலுகாக்களில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்கு இந்த விவரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று (08.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம்.

தேவதானப்பட்டி, போடிநாயக்கனூர், தேனி, பெரியகுளம் வட்டாரம் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாளை (10.09.2025) புதன்கிழமை நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டு, ஆதார் திருத்தம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சந்திரன் நேற்று (செப்.8) ஆண்டிபட்டியில் இருந்து இலைக்கட்டுகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்றுள்ளார். க.விலக்கு அருகே வந்தபோது நிலை தடுமாறிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி டிச.20 அன்று தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.