Theni

News September 11, 2025

தேனி: லாரி கவிழ்ந்து தலை சிக்கி டிரைவர் துடிதுடித்து பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் பொன்கிருஷ்ணன். டிப்பர் லாரி ஓட்டுநராக இவர் நேற்று (செப்.10) வைகை அணை அருகே உள்ள தனியார் கல்குவாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றுவதற்காக டிப்பர் லாரியை ஓட்டிச் சென்றார். வனவியல் கல்லுாரி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்த பொன்கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். வைகை அணை போலீசார் வழக்கு பதிந்தனர்.

News September 11, 2025

தேனி: மரத்தில் மோதி நொறுங்கிய கார்-தம்பதி பலி

image

தேனி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்,மாய கிருஷ்ணம்மாள் அவர்களின் மூத்த மருமகள் விஜயபாரதி உள்ளிட்ட 7 பேர் விருதுநகர் மாவட்டம், சிவகிரிக்கு மாரியப்பன் மகள் இல்ல விழாவிற்கு தேனியிலிருந்து சிவகிரி சென்றனர். பின்,நேற்று முன்தினம் இரவு, சிவகிரியிலிருந்து ஊருக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை மாதரை கிராமம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், புளிய மரத்தில் மோதி மாரியப்பன், மாயகிருஷ்ணம்மாள் இறந்தனர்.

News September 11, 2025

தேனியில் சிறுமி கர்பம் கணவர் உட்பட ஐவர் மீது வழக்கு

image

ஆண்டிபட்டி அருகே ராஜக்காள்பட்டியை சேர்ந்தவர் பிரதாப் (25). இவர் சிவகாசியில் பிளஸ் 1 படித்து வரும் தனது உறவினர் மகளான சிறுமியை காதலித்து திருமணம் செய்த நிலையில் சிறுமி தற்பொழுது கர்ப்பமாக உள்ளார். இது குறித்த புகாரில் தேனி மகளிர் போலீசார் பிரதாப், அவரது பெற்றோர் இன்பராஜ், பாண்டியம்மாள், சிறுமியின் பெற்றோர் ராஜா, பந்தன செல்வி ஆகியோர் மீது நேற்று (செப்.10) வழக்கு பதிவு செய்து விசாரணை.

News September 11, 2025

தேனியில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News September 11, 2025

கம்பம் – நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற மனு

image

கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 22 வார்டு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து தமிழ்நாடு நகர நிர்வாக சட்டம் 1998 51ன்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டி கம்பம் நகர ஆணையாளரை தொடர்ந்து தேனி ஆட்சியரிடம் (செப்.10) நேற்று மனு அளித்தனர்.

News September 11, 2025

தேனி: இரட்டிப்பு லாபம் தரும் தொழிலுக்கு இலவச பயிற்சி

image

தேனி மதுரை ரோட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையம் இயங்குகிறது.இங்கு இன்று (செப்.11ல்) காலை 10:00 மணி முதல் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி நடக்க உள்ளது. இதில் விவசாயிகள், பொது மக்கள், தொழில்முனைவோர் பங்கேற்று பயனடையலாம். விரும்புவோர் 98650 – 16174 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இந்த வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News September 11, 2025

கம்பம் – நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற மனு

image

கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 22 வார்டு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து தமிழ்நாடு நகர நிர்வாக சட்டம் 1998 51ன்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டி கம்பம் நகர ஆணையாளரை தொடர்ந்து தேனி ஆட்சியரிடம் (செப்.10) நேற்று மனு அளித்தனர்.

News September 11, 2025

வைகை அணை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எம்பி

image

பெரியகுளம் அருகே வைகை அணை பகுதியில் இன்று மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் சார்பாக அணை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேனி எம்.பி தங்கத்தின் செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் கலந்து கொண்டு வைகை அணை பாதுகாப்பு குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வைகை அணைப்பகுதியில் பார்வையிட்டனர்.

News September 10, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (செப்10) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News September 10, 2025

சின்னமனூர் வட்டாரம் கல்வி அலுவலர் தற்கொலை

image

சின்னமனூர் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார்(49) இவர் (செப்.09) நேற்று நண்பகல் வேளையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவல் பெயரில் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்பத்தார் கொடுத்த புகாரின் பெயரில் அல்லிநகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு மார்க்கையன்கோட்டையில் இவரது இறுதி ஊர்வலம் நடந்தது.

error: Content is protected !!