Theni

News February 16, 2025

 அனைத்து வேலை நாட்களிலும் ஆதார் சேவை மையம்

image

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அனைத்து வேலை நாட்களிலும் ஆதார் சேவை மையம் செயல்படும் என தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார். அதில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு உள்ளிட்டவைகளை பெரியகுளம், போடி உள்ளிட்ட தலைமை அஞ்சலகங்களிலும் தேனி துணை அஞ்சலகங்களிலும் காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News February 16, 2025

ஐயப்ப பக்தர்கள் வேனில் தீ விபத்து

image

கா்நாடக மாநிலத்தை சோ்ந்த கோபால நாயக் உள்ளிட்ட 5 பேர் மாலை அணிந்து ஆம்னி வேனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று விட்டு நேற்று (பிப்.15) மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். உத்தமபாளையம் அருகே வந்த போது வேனில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து வேனை நிறுத்திய ஓட்டுநர் அனைவரையும் கீழே இறங்கிவிட்டார். வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 15, 2025

தேனி மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பலருக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். வெயிலில் அலையக்கூடாது. தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். எந்த வகையான அம்மை என்பதை கண்டறிந்து டாக்டர்களின் ஆலோசனைப்படி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

News February 15, 2025

தேனி: கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு

image

தேனி மாவட்டத்தில் 1065 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் 9 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 9 வட்டாரத்திலும் தலா 100 கர்ப்பிணி பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 15, 2025

ஆய்வக கட்டடம்; காணொளி காட்சி மூலம் முதல்வர் திறப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகத்திலிருந்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் மற்றும் இராஜதானி அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 3.11 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டடத்தினை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

News February 14, 2025

 மஞ்சப்பை விருதுகள் – ஆட்சியர் அறிவிப்பு 

image

“மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வலைதளத்திலும் (https://theni.nic.in), தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வலைதளத்திலும் (tnpcb.gov.in) தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை; உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தேனி மாவட்டத்தில் மட்டும் 25 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச்.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். லிங்க் *ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.23 லட்சம் மோசடி

image

மேலக்கூடலுாரை சேர்ந்த தமிழரசி என்பவர் தனது வீட்டருகே உள்ள சண்முகப்பிரியா, அவரது மகள்கள் மவுனிகா, அஜிதா, மகன் தீபக்ராஜ், அஜிதாவின் கணவர் கர்ணன் ஆகியோர் இணைந்து தீபாவளி சீட்டு நடத்தி, 40 பேரிடம், ரூ.23.14 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சண்முகப்பிரியா, மவுனிகா, அஜிதா, கர்ணன் ஆகியோரை போலீசார் நேற்று (பிப்.13) கைது செய்தனர்.

News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி காலிபணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள் நாளை(பிப்.14). <<-1>>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கவும் *பிறரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்

News February 13, 2025

தேனி மாவட்டத்தில் 934 பேருக்கு பட்டா வழங்க பரிந்துரை

image

தேனி: அமைச்சர் சாத்துார் ராமசந்திரன் வருவாய்த்துறை சார்பில் நகர் பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க உள்ளதாக கூறியுள்ளார். இதற்காக தேனி மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் இருந்து 934 பேருக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!