India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செண்பகதொழுகுடி கிராம தலைவர் செல்லன் 80. அந்த கிராமத்தை சேர்ந்த இருவர் இடையே ஏற்பட்ட பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு செல்லன் சாந்தாம்பாறை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு திடீரென மயங்கி விழுந்தார். அவரை போலீஸ் வாகனத்தில் ராஜகுமாரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு வெளிநாட்டில் சென்று படிப்பதற்கு 10 முஸ்லிம் மாணவர்களுக்கு தலா ரூ.36 லட்ச விதம் கல்வி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணையதளத்தில் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை செய்து பயன்படலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.

தமிழ்நாடு அரசு முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு வெளிநாட்டில் சென்று படிப்பதற்கு பத்து முஸ்லிம் மாணவர்களுக்கு தலா 36 லட்ச ரூபாய் விதம் கல்வி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை செய்து பயன்படலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தீபாவளி பண்டிகை வருவதால் தங்களது தொலைபேசிக்கு வரும் குறைந்த விலையில் பரிசுப் பொருட்கள், ஆஃபர்கள் மற்றும் விளம்பரங்கள், லிங்க் போன்ற குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என தேனி மாவட்ட காவல் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற குற்றங்களை இந்த 1930 எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் , சின்னமனூர் , தேனி, பெரியகுளம் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (செப்.30) நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டு, ஆதார் திருத்தம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குன்னூர், அம்மச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்செல்வம் (55). இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில் அதன் காரணமாக மன வேதனையில் இருந்து வந்த அவருக்கு பக்கவாதம் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையில் இருந்து வந்த அவர் சில தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்தை குடித்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த அவர் நேற்று (செப்.28) உயிரிழந்தார். க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு.

போடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் ரேணுகாதேவி (28) வீட்டின் எதிர்ப்பை மீறி ஆயுத்யராஜ் என்பவரை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்த நிலையில் தற்போது அவர் ஆறு மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் ரேணுகாதேவி நேற்று முன்தினம் போடியில் அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் போடி தாலுகா போலீசார் விசாரணை.

நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <

கம்பம் பகுதியை சேர்ந்தவர் யோகபாலா. இவரது கணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிபிசூர்யா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக சில தினங்களுக்கு முன்பு யோகபாலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிபிசூர்யா அவரை தாக்கியதுடன் அவரது கார் கண்ணாடியையும் உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் கம்பம் வடக்கு போலீசார் சிபிசூர்யாவை கைது (செப்.28) செய்தனர்.

தேனி கனரா வங்கி சுயதொழில் வேலை வாய்ப்பு மையத்தில் அலைபேசி பழுது நீக்குதல், பெண்களுக்கான எம்பிராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங், அலுமினியம் தயாரிப்பு, புகைப்பட பிரேம் தயாரித்தல், ஸ்கீரின் பிரீன்டிங் இலவச பயிற்சிகள் அக்.6ல் துவங்குகின்றன. பயிற்சியில் சேர விரும்புவோர் தேனியில் உள்ள கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை அணுகலாம். அல்லது 95003-14193 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.