India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரம்யா தேவி (24). கல்லூரி மாணவியான இவரது பெற்றோருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், அவரது மகன் தவப்பாண்டி, மனைவி சத்யா, உறவினர் ஜீவா ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நான்கு பேரும் தனது பெற்றோரை அவதூறாக பேசியதை ரம்யா கண்டித்த நிலையில் அவர்கள் 4 பேரும் ரம்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 4 பேர் மீதும் போலீசார் வழக்கு (அக்.2) பதிவு.

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (47). இவரது மகளான ஜெனிபர் நேற்று முன் தினம் அவரது கணவருடன் தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தந்தை, மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மகள் கோபித்துக் கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த ராஜா நேற்று (அக்.3) அரளி விதையை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.

தேனி மக்களே; இந்திய ரயில்வேயில் செக்ஷன் கண்ட்ரோலர் பதவியில் 368 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 20-33 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இந்த <

இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் ஒரு ஹோட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடந்தது.தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயராம், 38,சுந்தர பாண்டியன், 34, மைக்கேல், 36, ஆகியோர் ஈடுபட்டனர். கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் ஜெயராம் இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் சத்தம் ஏதும் வராததால், அவரை பார்க்க சுந்தர பாண்டியனும், மைக்கேலும் தொட்டிக்குள் இறங்கினர். மூவரும் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி பலியாகினர்.

தேனி மாவட்டத்தில் இன்று .10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி காதி கிராப்ட் அங்காடியில் இன்று (02.10.2025) வியாழக்கிழமை காந்தியடிகள் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., காதிகிராபட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கிவைத்தார். இதில் அரசு அதிகாரிகள், காதி கிராஃப்ட் நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.

தேனி மாவட்டத்தில் இன்று (02.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (37). இவருக்கு சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதன் காரணமாக வேதனையில் இருந்து வந்த பாண்டியராஜ் சில தினங்களுக்கு முன்பு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு (அக்.1) பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தேனி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் கடந்தாண்டு ஆண் குழந்தைகள் 608, பெண் குழந்தைகள் 592 பேர் என 1200 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தாண்டு கடந்த 8 மாதங்களில் 609 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த எட்டு மாதங்களை ஒப்பிடுகையில் குழந்தைகள் பிறப்பு குறைந்து காணப்படுகிறது. இதில் ஆண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் சரிந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.