India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனியில் இன்று (அக் 14) முதல் அக். 20 (திங்கள் கிழமை) வரை 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

தீபாவளி பண்டிகை சில நாட்களில் கொண்டாடப்படவுள்ள நிலையில் பட்டாசு கடை உரிமையாளர்கள் உரிமம் பெற்ற இடத்தில் மட்டும் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். சட்டவிரோத பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது. அதிக ஒளி, ஒலி எழுப்பக்கூடிய வகையிலான பட்டாசுகள் விற்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

கேரளா, இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பீட்டர் (51). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கம்பம் வந்த நிலை அங்கு மது குடித்துள்ளார். கம்பம் பகுதியில் மது போதையில் நடந்து சென்றவர் தவறி சாக்கடையில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனில் உயிரிழந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு (அக்.13) பதிவு செய்து விசாரணை

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று (அக்.13) தேவாரம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இவரை பிரசாத் என்பவர் வழிமறித்து குடிப்பதற்கு பணம் கொடுக்குமாறு கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். சுதாரித்துக் கொண்ட மணி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பிரசாத்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர்.

இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5.கடைசி தேதி: 14.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

உப்புக்கோட்டையை சேர்ந்தவர் நவீன்குமார் (25). அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (27) இவர்கள் இருவரும் நண்பர்கள். அக்.,6.ல் வீட்டை விட்டு சென்ற நவீன்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் நடத்திய விசாரணையில் குணசேகரன், நவீன் குமாரை வெட்டி கொன்று அவர் அணிந்திருந்த 2 சவரன் நகையை பறித்து உடலை முல்லை ஆற்றில் வீசியது தெரிய வந்தது. போலீசார் உடலை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக திரிசூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதும் காவல்துறையினருடன், வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் இணைந்து நேற்று (அக்.13) அணை பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். பின்னர் மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது. இடுக்கி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் இன்று 13.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு காரங்கள் கேக்குகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் முறையாக பதிவு செய்து கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இனிப்பு மற்றும் காரம் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் முறையாக அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.