Theni

News April 7, 2024

உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு

image

ஆண்டிபட்டி உழவர் சந்தையில் 100% வாக்களிப்பினை உறுதி செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வீ.ஷஜீவனா அறிவுறுத்தலின்படி நேற்று நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபா ஆலோசனை படி உதவி அலுவலர் பால்பாண்டி மற்றும் விவசாயிகள்,வியாபாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டு தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 6, 2024

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

image

வீரபாண்டி அருகே தனியார் மில்லில் வேலை பார்ப்பவர் சர்வேஷ் (36). இவர் வீரண் என்பவருடன் நேற்று இரவு வீரபாண்டி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த 2 வாலிபர்கள் சர்வேஷின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு ரூ.1000 பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். இதையடுத்து தகவலின் பேரில் தனசேகரன் (20), சிம்பு (20) ஆகியோரை வீரபாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 6, 2024

பெரியகுளம் அருகே மருத்துவ முகாம்

image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகப்பட்டி வள்ளலார் சத்ய ஞான சபை தர்மச்சாலையில் இன்று கலிக்கம் சித்த மருத்துவ கண் சிகிச்சை சொட்டுநீர் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் ஏராளமான முதியோர்கள் கலந்து கொண்டு, கண்ணை பரிசோதித்து மருத்துவ சொட்டுநீர் செலுத்தி பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வள்ளலார் சத்ய ஞான சபை நிர்வாக குழு பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

News April 6, 2024

பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

தேனி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 381 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 0 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

தேனியில் விறுவிறு தபால் வாக்குப்பதிவு

image

தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்கினை பதிவு செய்திட படிவங்கள் பெறப்பட்டு கடந்த 25.03.2024 அன்று வாக்காளர்கள் இறுதி செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் இன்று (ஏப்.6) சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது தபால் வாக்கினை பதிவு பெற்றனர்.

News April 6, 2024

வாகன சோதனையில் ரூ.5,53,000 பறிமுதல்

image

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் காவல் நிலைய சோதனை சாவடியில் இன்று (ஏப்.6) SST-4 அணியினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் அதில் ரூ.5,53,000 தக்க ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. அந்த பணம் கைப்பற்றப்பட்டு உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.

News April 6, 2024

353 வாக்குச்சாவடிகள் தீவிர கண்காணிப்பு

image

தேனி மக்களவை தொகுதியில் மொத்தம் 253 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 353 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அவற்றில் வாக்கு சாவடி நுண்பாா்வையாளா் குழு நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த வாக்குச் சாவடி பகுதியில் கூடுதல் எண்ணிக்கையில் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு வாக்குப் பதிவு நடவடிக்கைகள் முழுமையாக விடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்படும் என தேர்தல் அலுவலர் அறிவிப்பு

News April 6, 2024

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

போடி இராசிங்காபுரத்தை சேர்ந்த மூதாட்டி சிந்தாமணி என்பவரை 21.08.14 அன்று கொலை செய்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த சேதுபதி என்பவரை போடி தாலுகா போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்.5) குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்தார்.

News April 5, 2024

தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி

image

தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு இன்று என்ஆர்பி செவிலியர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் அனைத்து பொதுமக்களும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தேர்தலில் அனைத்தும் பொதுமக்களும் 100 சதவிதம் வாக்களிப்பது அவசியம் குறித்து செவிலியர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 5, 2024

வனப்பகுதியில் தீ வைத்த வாலிபருக்கு சிறை.

image

தேனி அருகே கைலாசநாதர் கோவில் பின்புறத்தில் உள்ள காப்புகாட்டில் தீ பற்றி எரிந்தது.  இது தொடர்பாக பெரியகுளம் அருகே சரத்து பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாரை (29) மற்றும்

அதே ஊரைச் சேர்ந்த சிவா ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் ராஜ்குமாரை கைது செய்து நேற்று பெரியகுளம் சப் ஜெயிலில் அடைத்து  தப்பி ஓடிய சிவாவை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!