India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் இன்று(ஆக.,16) 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, நெல்லை, குமரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என தொழிலாளர் நலத்துறை சார்பில் நேற்று (ஆக.15) தேனி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 61 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 47 நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டது. இந்நிறுவனங்கள் மீது தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மக்காச்சோள சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக ரூ.12,000 மதிப்பிலான 10 கிலோ விதை, 1 லிட்டர் திரவ உயிர் உரங்கள், 500 மி.லி. நானோ யூரியா, 12.5 கிலோ இயற்கை உரம் ஆகியன 50% மானியத்தில் ரூ.6,000-க்கு வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

மத்திய தொல்லியல் துறையின், தென் மண்டல ஆலய ஆய்வு திட்டத்தின், சென்னை பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள மாயபாண்டீஸ்வரர் கோவிலில் பாண்டியர் கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து சென்னை கல்வெட்டு பிரிவு இயக்குனர் இயேசு பாபுவின் தலைமையில் கல்வெட்டு ஆய்வாளர்கள் படியெடுக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

தமிழக-கேரள எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக குமுளி மலை பாதை உள்ளது. லோயர் கேம்ப் – குமுளி வரை உள்ள 6 கிலோமீட்டர் தூரம் உள்ள மலை பாதை அடர்ந்த வனப் பகுதிக்குள் உள்ளது. மற்றும் இங்கு அதிக வனவிலங்குகள் உள்ளன. அதனால் மலைப்பாதை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை வீசாதீர்கள் என வன அதிகாரிகள் விழிப்புணர்வும் கொடுத்து, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் 78ஆவது சுதந்திர தின விழா 14.08.2024 புதன்கிழமை, 15.08.2024 வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நேற்று முதல் நாள் நிகழ்வாக 2723 மாணவியர்கள் இணைந்து, கல்லூரி மைதானத்தில் 120×30 என்ற மிகப்பெரிய அளவில் தேசிய மூவர்ணக்கொடி மாதிரியை அந்தந்த வண்ணங்களுக்கு ஏற்ப சரியாக அமர்ந்து அலங்கரித்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் அனைத்து அரசு மதுபான கடை மற்றும் தனியார் மதுபான கடைகளை நாளை(ஆக.15) மூட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மது பாட்டில் சில்லறை விற்பனை நபர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனியில் உள்ள 130 கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.