India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி அருகே சாலை இல்லாததால் டோலியால் தூக்கி சென்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். சின்னூர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவரை சுமார் 5 கிலோ மீட்டர் வரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் டோலி கட்டி சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், சீலையம்பட்டி கம்பர் பள்ளித் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் திருமாறன் (19) ஆசைவார்த்தை கூறி, வெளியூர் அழைத்து சென்று விட்டதாக சிறுமியின் பெற்றோர் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சின்னமனூர் அருகேயுள்ள கூளையனூரில் தங்கியிருந்த சிறுமியை மீட்டனர்.

கொடைக்கானல் மலை கிராமமான சின்னூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைக்காக வனப்பகுதி வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து பெரியகுளம் வரவேண்டும். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கு உடல்நிலை குன்றியதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மாரியம்மாளை சுமார் 5 கிலோ மீட்டர் டோலி கட்டி சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை பெற கலெக்டர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 17, 19, 20 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது என வாட்ஸ் அப் செயலியில் வதந்தி பரவியது. இதனை நம்பி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று (ஆக.17) கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இந்நிலையில் மகளிர் உரிமை தொகை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த 8 பேரிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னையை சேர்ந்த பூகிஸ்வரன், அவரது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் தேனியை சேர்ந்த குகன்ராஜா ஆகியோர் ரூ.1,11,89,500 பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 8 பேர் தேனி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் பூகீஸ்வரனை நேற்று (ஆக.17) கைது செய்தனர்.

தேனி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது . இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 2,033 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), டிஏபி 572 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 439 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 4,048 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வன உயிரின வேட்டையை தடுத்தல், வனப்பரப்பை மதிப்பீடு செய்வது, புதிய நோய்கள் பரவுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக ‘ட்ரோன்’ பயிற்சி வனத்துறையினருக்கு கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்று 3 மாதங்களை கடந்தும் ட்ரோன் வழங்கப்படவில்லை. குறிப்பாக புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு ‘ட்ரோன்’ வழங்க வேண்டும் என வன ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியான வட்டக்கானல், வெள்கெவி ஆகிய பகுதிகளில் கடந்த சிலநாள்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால் தேனி கும்பக்கரை அருவிக்கு கிழே உள்ள அற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பெருமாள்புரத்தை சேர்ந்த 4 பெண்கள் 5 குழந்தைகள் குளிக்க சென்ற இடத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கினர். தகவலறிந்த தீயணைப்பினர் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி அவர்களை மீட்டனர்.

தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த ஆண்டில் 17000 சதுர மீட்டர் பரப்பில் மானியத்தில் பசுமை குடில் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் குறைந்தது 500 ச.மீ முதல் 4000 ச.மீ வரை பசுமை குடில் அமைக்க விண்ணப்பிக்கலாம். மானியமாக ச.மீட்டருக்கு குறைந்த பட்சம் ரூ.422 அதிகபட்சம் ரூ.467.5 வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.