Theni

News April 16, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி 

image

கம்பம் பகுதியை சோ்ந்தவா் பிரபாகரன் ( 52). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 12 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபாகரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஏப்.15) அவர் உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

News April 16, 2024

வெற்றி பெற ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்

image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் நாடாளுமன்ற உறுப்பினராக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என திமுக மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அன்புச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் முத்து விஜயன், சதீஷ்குமார், மணி கருப்பையா ஆகியோர் சபரிமலையில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

News April 15, 2024

85 % வாக்காளர்களுக்கு பூத் சிலிப்

image

தேனி மாவட்டத்தில் மொத்தம் 16.20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 7.95 லட்சம், பெண்கள் 8.24 லட்சம், இதர 218 பேர் உள்ளனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகிக்கும் பணி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏப்.1ல் தொடங்கபட்டது. நேற்று முன்தினம் (ஏப்.13) வரை 13.84 லட்சம் வாக்காளர்களில், 85 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஷஜூவனா தெரிவித்துள்ளார். 

News April 15, 2024

தேனி: கோயில் திருவிழாவில் தகராறு

image

கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் முகிலன். இவர் B.Com படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஒரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டு பயந்து ஓட முயன்றார். அப்போது  அவரை பிடித்து அடித்து உதைத்தனர். முகம், பின்னந்தலையில் இரத்த காயம் ஏற்பட்டு  பெரியகுளம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 15, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி 

image

பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று தனது டூவீலரில் செட்டிகுளம் கண்மாய் அருகே சென்ற போது எதிரே வந்த வேன் மோதியதில் தலையில் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 15, 2024

மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை

image

போடி பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கா். இவரது மனைவி முத்துமாரி. ரவிசங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முத்துமாரி அதனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிசங்கா் நேற்று முன் தினம் (ஏப்.13) விஷம் குடித்த நிலையில் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி நேற்று (ஏப்.14) உயிரிழந்தாா். இதுகுறித்து போடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 14, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி

image

கோட்டூரை சேர்ந்தவர் மாயன் பெருமாள் (71). இவர் நேற்று சீலையம்பட்டி மெயின் ரோட்டில் இடது ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கு அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News April 14, 2024

ஓடும் பேருந்தில் மாணவன் பலி

image

வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவர் அரசு கல்லூரியில் 1 ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் கல்லூரி செல்ல தனியார் பேருந்தில் ஏறி முன் வாசல் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். சக்கம்பட்டி அருகே பேருந்து வளைவில் திரும்பும் போது கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 14, 2024

மாநில எல்லையில் தேர்தல் விழிப்புணர்வு

image

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு சம்பந்தமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தமிழகம்-கேரளா எல்லை பகுதியான குமுளி பகுதியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா, கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்

News April 13, 2024

தேனி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராம்நாடு, நாமக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், சேலம், கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை மற்றும் நெல்லை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!