Theni

News April 18, 2024

தேனி தொகுதியில் 25799 இளம் வாக்காளா்கள்

image

தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 201 ஆண்கள், 8 லட்சத்து 25 ஆயிரத்து 529 பெண்கள், 219 மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட 16 லட்சத்து 22 ஆயிரத்து 949 வாக்காளர்களாக உள்ளனா். வாக்காளா் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் 14,193 ஆண்கள், 11,602 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 என மொத்தம் 25,799 இளம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

News April 18, 2024

1788 வாக்குச் சாவடிகளில் நாளை வாக்குபதிவு

image

தேனி மக்களவைத் தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 888 இடங்களில் மொத்தம் 1788 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாளை (ஏப்.19) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது.

News April 18, 2024

கம்பம் கௌமாரியம்மன் கோயில் திருவிழா

image

தேனி மாவட்டம் கம்பத்தில் ஸ்ரீ கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று மாலை 6 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கம்பம் கௌமாரியம்மன் கோவில் திருவிழா ஒரு வார காலம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற நிகழ்வில் கம்பம் பகுதியை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News April 17, 2024

தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நிறைவு

image

தேனி மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 100 கி.மீ. தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நடைபெற்றது. இப்பேரணி அல்லிநகரம் நகராட்சியில் இன்றுடன் நிறைவு பெற்றது. மேலும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News April 17, 2024

தேனி: பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

image

மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக இன்று முதல்(ஏப்.17,18,19) வரை பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை தீவிர களப் பணியாற்றிட வேண்டும் எனவும், 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் மேலும் தெருக்கள், குறுகிய வீதிகளிலும் ரோந்து செல்ல வேண்டும் என தேனி தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

News April 17, 2024

தேனியில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் இன்று(ஏப்.17) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 17, 2024

ஆண்டிபட்டி அருகே ஒருவர் பலி 

image

முத்தாலம்பாறையைச் சேர்ந்தவர் தனிக்கொடி. இவர் வீட்டின் அருகே தனி தகர செட்டில் தங்கி இருந்தார். கடந்த 14 ஆம் தேதி அவர் வீட்டை விட்டு வெளியே வந்த அவர்  தடுமாறி கீழே விழுந்து பாறையில் மோதியதில் தலையில் காயமடைந்தார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 17, 2024

பஞ்சு பொம்மை தயாரித்தல் பயிற்சி

image

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மென் பஞ்சு பொம்மை தயாரித்தல் பயிற்சி மே.8 முதல் மே.22 வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் சேர 18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

 தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

தேனி,தமிழக கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் ஒருமுறை சித்ரா பெளர்ணமியன்று நடைபெறும் திருவிழாவிற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமி ஏப்.23 இல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு ஏப்.23இல் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே.4 பணிநாள் எனவும் அறிவிப்பு.

News April 16, 2024

1.5 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்

image

தேனி, ஆண்டிபட்டியில் இந்தியாவில் பல கிராமங்களில் இன்னும் பேருந்து வசதி மின்சார வசதி கூட இல்லாத சூழ்நிலையில் தமிழக முதல்வர் கொண்டு வந்த திட்டம் தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம்; இத்திட்டத்தால் 1.5 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.  இது போன்ற மக்களுக்கு மகத்தான திட்டங்களை கொண்டு வரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.ஸ

error: Content is protected !!