Theni

News April 21, 2024

தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு

image

போடி, பொட்டிப்புர பொதுமக்கள் கடந்த ஏப்.19 அன்று அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி தோ்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்புக்கொடியை தெருக்களில் கட்டியிருந்தனர். மேலும் தோ்தலை புறக்கணித்து தெருவில் அமா்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனா். தோ்தல் விதிகளை மீறி பதாகை கட்டியதாக தோ்தல் விடியோ கண்காணிப்புப் படை அலுவலர் அளித்த புகாரில் கிராம மக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 21, 2024

மளிகை கடையில் பெட்ரோல் விற்றவர் தப்பி ஓட்டம்!

image

க. விலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிருந்தா தலைமையில் போலீசார் நேற்று அம்மச்சியாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாயக்கண்ணன் என்பவர் தனது பெட்டி கடையில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்றுக் கொண்டிருப்பதை கண்டனர். போலீசாரை கண்டதும் மாயக்கண்ணன் தம்பி ஓடி தலைமறைவானார். இதையடுத்து, போலீசார் கடையை சோதனையிட்டு பத்து லிட்டர் பெட்ரோலை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News April 20, 2024

பெருமாள் கோயிலில் டிடிவி சாமி தரிசனம்

image

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி அருகே வயல்பட்டியில் உள்ள பெருமாள் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். மேலும் நேற்று தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பெருமாள் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் அமமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News April 20, 2024

தேனி: வச்சாச்சு சீல்! இனி ஜூன் 4 வரை காவல்

image

தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கம்மவார் சங்கம் கல்லூரியின் பாதுகாப்பு அறையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறை மூடி முத்திரையிடப்பட்டது.

News April 20, 2024

தேனி தொகுதியில் 69.87% வாக்குப்பதிவு

image

தேனி மக்களவை தொகுதியில் நேற்று (ஏப்.19) நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இறுதி நிலவரப்படி சோழவந்தான் 74.98%, உசிலம்பட்டி 70.95%, ஆண்டிபட்டி 70.82%, பெரியகுளம் 66.01%, போடிநாயக்கனூர் 71.06%, கம்பம் 66.60% என மொத்தமாக 69.87% வாக்குப்பதிவு நடை பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 20, 2024

வாக்காளா் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்காளா்கள் ஏமாற்றம்

image

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள 172ம் எண் வாக்குச்சாவடியில் நேற்று (ஏப்.19) வாக்களிக்க வந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் பெயா்கள் வாக்காளா்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்ததால், அவா்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாக்காளா்கள் தோ்தல் அதிகாரிகளிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

News April 20, 2024

அதிவேகம்: தேனியில் விபத்து! 

image

மயிலாடும்பாறையைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் கடமலைக்குண்டில் இருந்து மயிலாடும்பாறை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த விக்ரமின் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடமலைகுண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2024

தேர்தல் நாளில் கள்ள மது விற்றவர் கைது

image

தேனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, தேனி புதிய பேருந்து நிலையம் அருகே தேனியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் என்பவர், தேர்தல் நாளில் மதுக்கடைகள் அடைத்திருந்த நிலையில், கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டதில் 12 மது பாட்டில்கள் அவரிடம் கைப்பற்றப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

News April 19, 2024

தேனி: 41.28% வாக்குப்பதிவு

image

தேனி மக்களவை தொகுதியில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மதியம் 1:00 மணி நிலவரப்படி சோழவந்தான் 44.63%, உசிலம்பட்டி 42.82%, ஆண்டிபட்டி 36.04%, பெரியகுளம் 39.86%, போடிநாயக்கனூர் 44.74%, கம்பம் 40.3% என மொத்தமாக 41.28% வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 19, 2024

தேனி மக்களவைத் தொகுதி 25.75% வாக்குப்பதிவு

image

தேனி பாராளுமன்ற மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரம் படி சோழவந்தான் 27.98% உசிலம்பட்டி 26.61% ஆண்டிபட்டி 20.71% பெரியகுளம் 25.10% போடிநாயக்கனூர் 28.73% கம்பம் 25.85% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!