Theni

News March 20, 2024

தேனி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

image

தேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் 14,219 பேர், 40 சதவீதத்திற்கும் மேல் உடல் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் 11,096 பேர் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் மக்களவை தோ்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு உரிய படிவத்தை பூர்த்தி செய்து மாா்ச் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 20, 2024

தேனியில் அமமுக, பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

image

தேனியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக – அமமுக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக – அமமுக மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News March 20, 2024

தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

image

தேனி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக தங்க தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

News March 20, 2024

தேனி: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச்.20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார் . அதன்படி தேனி தொகுதியில் வேட்பாளராக நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

News March 19, 2024

சின்னம் இன்றி நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்

image

நாம் தமிழா் கட்சி கரும்பு விவசாயி சின்னம் தற்போது ஐக்கிய பாரதிய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளா் பெயர் மற்றும் படத்தை மட்டும் போட்டு வாக்களியுங்கள் என்று தேனி மாவட்டம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனா்.

News March 19, 2024

நீர்மோர் பந்தல் திறக்க சிவசேனா கட்சி கோரிக்கை

image

தேனி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குரு ஐயப்பன் கோரிக்கை வைத்துள்ளார்.

News March 19, 2024

தேர்தல் பறக்கும் படை சோதனையில் 5.77 லட்சம் பறிமுதல்

image

தேனி – மதுரை சாலையில் கருவேல்நாயக்கன்பட்டி அருகே நேற்று (மார்.18) பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண்டிபட்டியை சேர்ந்த பெருமாள் அவ்வழியே டூவீலரில் தேனிக்கு சென்றார். அவரிடம் பறக்கும் படையினர் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ.5.77 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

News March 19, 2024

தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

தேனி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்ட நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு தேனி மாவட்ட காவல் துறை 04546-261730, அலைபேசி எண்: 9363873078 அறிமுகப்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தேனி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News March 19, 2024

மக்கள் குறைதீர் கூட்டம் நிறுத்தம் – கலெக்டர்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!