India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனியில் உள்ள தனியாா் தங்கும் விடுதிகளில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் முத்துமாதவன் தலைமையில் அலுவலா்கள் நேற்று (மார்.27) சோதனை நடத்தினா். அதில் தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தனியாா் விடுதி ஒன்றில் தங்கியிருந்த காா்த்திக் என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.4,49500 வைத்திருந்துள்ளார். அதனை பறிமுதல் செய்து பெரியகுளம் சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள், வேட்பு மனுவோடு அவர் தாக்கல் செய்தார். அதில் டிடிவி தினகரன் ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாளி என்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை பாக்கி ரூ.28 கோடி எனவும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனில் பணிபுரிந்து வந்த தாசில்தார் முருகேசன் என்பவர் தனது கேபிள் டிவி உரிமத்தை ரத்து செய்ததால் கடமலைக்குண்டை சேர்ந்த வேல்முருகன் என்பவர் 2013 இல் தாசில்தாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுரேஷ்குமார் வேல்முருகனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் செளந்தரபாண்டியனார் நற்பணி மன்றம் சார்பில் நாடார் கலைவாணி பாலர் பள்ளியில் மார்ச்.31 இல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தேனி மாவட்டம், கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.ஆர் ராமச்சந்திரனை இன்று மரியாதை நிமித்தமாக டிடிவி தினகரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் தேனி தெற்கு மாவட்ட தமாகா தலைவர் செல்வேந்திரன், கம்பம் நகரத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மக்களவை தொகுதியின் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன் தேனி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் . உடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆர்.வி.ஷஜீவனாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பாளர்களாக அறிவரசு பாண்டியன், ரேவதி, நிஷாந்த், தியாகராஜன், அஜித்குமார், பிரகாஷ், சதீஷ்குமார் உள்ளிட்டோர் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று தங்களது வேட்பு மனுக்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அவர்களிடம் தாக்கல் செய்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்.27) பல்வேறு அரசியல் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மனிதநேயத்திற்கான அமைதி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் சர்ச்சில் துரை தனது வேட்பு மனுவினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார்.
தேனி அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் தினமும் மனைவியுடன் சண்டையிட்டு வந்தார். அதை அவரது மகன்கள் தட்டிக் கேட்டபோது, தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி வந்தார். 25ம் தேதி மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர் விஷமருந்தி விட்டேன் என கூறி மயங்கினார். மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.
தேனி மாவட்டத்தில் விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்களோ அல்லது சம்பந்தப்பட்ட நபர்களோ 04546_261730 அல்லது 9363873078 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.