Theni

News March 22, 2025

தேனியில் நாளை முதல் கோலாகல துவக்கம் 

image

தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா நாளை(மார்ச் 23) துவங்குகிறது.பழனிசெட்டிபட்டி மேனகா மில் மைதானத்தில் நாளை மாலை 4:00 மணிக்கு புத்தக திருவிழா துவக்க விழா நடக்கிறது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகிக்கிறார். அமைச்சர் பெரியசாமி துவங்கி வைக்கிறார். இவ்விழா மார்ச் 23 முதல் மார்ச் 30 வரை 8 நாள்கள் நடைபெறவுள்ளது..

News March 21, 2025

தேனி :வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

நாட்டுக்காக தங்களது இளம் வயதை ராணுவ பணிகளில் கழித்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும் வாழ்வாதார மேம்படுத்திடவும் வங்கி கடன் பெறலாம். முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் , தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கி கடன் பெறுவதற்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

தேனிக்கு கனமழை வாய்ப்பு

image

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில்
இன்றும், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளையும் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News March 21, 2025

தேனிக்கு கனமழை வாய்ப்பு

image

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில்
இன்றும், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளையும் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News March 21, 2025

தேனியில் மார்ச்.31ம் தேதி கடைசி நாள்…

image

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடப்பாண்டில் வீட்டு வரி,குடிநீர் வரி, தொழில் வரி இவற்றை செலுத்துவதற்கு கடைசி நாள் வருகிற மார்ச். 31 ஆம் தேதி ஆகும். பொதுமக்கள் அலுவலகங்களிலோ அல்லது ஆன்லைன் மூலம் வரி செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். வரி கட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.வரி காட்டாதவர்களுக்கு அனுப்பி வரி கட்ட சொல்லுங்க..

News March 21, 2025

தேனியில் 26 டன் ரேஷன் அரிசி பதுக்கல்

image

அல்லிநகரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள கோடவுனில் 26 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பதுக்கியதை, வழங்கல் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்த ரவிக்குமார், துரைப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.

News March 20, 2025

தேனி : இந்த கோவிலுக்கு இவ்வளவு சக்தியா?

image

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ளது வழிவிடும் முருகன் கோவில். இங்கு மூலவராக உள்ள முருக பெருமானுக்கு தினசரி பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளா ஏலத்தோட்ட வேலைக்கு செல்லும் வேலையாட்கள் இந்த கோவிலில் தினசரி வழிபாடு நடத்திச் செல்கின்றனர். நெடுந்தூர பயணத் திட்டம் நிறைவேறாமல் இருந்தால் இங்கு வழிபட்டுச் சென்றால் பயணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

News March 20, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 20) நீர்மட்டம்: வைகை அணை: 59.32 (71) அடி, வரத்து: 150 க.அடி, திறப்பு: 722 க.அடி, பெரியாறு அணை: 113.40 (142) அடி, வரத்து: 221 க.அடி, திறப்பு: 311 க.அடி, மஞ்சளார் அணை: 31 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 69.37 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 33.50 (52.55) அடி, வரத்து: 5 க.அடி, திறப்பு: இல்லை.

News March 20, 2025

காசிக்கு நிகரான தேனியின் பெரிய கோவில்

image

தேனி மாவட்டதிலேயே பரப்பளவில் பெரியதாக பெரியகுளம் பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது.ராஜேந்திர சோழன் கட்டிய இந்த கோவிலில் மூலவராக சிவன் இருந்தாலும் முருகன் தான் பிரசித்தி பெற்றவர்.இங்குள்ள வராக நதியில் நீராடி முருகனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.காசியை போன்று நதியின் இருபுறமும் நேரெதிரே ஆண் பெண் மருத மரங்கள் அமைந்துள்ளது சிறப்பு .

News March 20, 2025

தேனியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (மாா்ச்.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 98948 89794 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!