India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், அரசாணைப்படி தமிழில் பெயர் பலகை அமைக்காத 10 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தமிழில் பெயர்ப்பலகை அமைக்கப்படவில்லை எனில் அந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அலுவலர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஜீன்.21 அன்று காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் தேனி முதல் வீரபாண்டி சாலையில் கடந்த இரண்டு வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முதல் மேகம் கூட்டங்களுடன் மழை பெய்யும் சூழல் இருந்து வந்தது. தற்போது லேசான சாரல் மழை பெய்தது தேனி மக்கள் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. வருகிற 22 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற வெள்ளிக்கிழமை (ஜீன்.21) அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. எனவே, தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இதில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 27.06.2024 முதல் 05.07.2024 வரை (29.06.2024, 30.06.2024 மற்றும் 01.07.2024) ஆகிய நாட்கள் நீங்கலாக 1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள 8 உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு தலா 3 வீதம் 24 பண்ணை குட்டைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது மானாவாரி நிலங்கள் மற்றும் தோட்டங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படும். தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் ஏசி, பிரிட்ஜ் பழுது பார்த்தல் இலவச பயிற்சி ஜூலை.15 முதல் ஆக.20 வரை நடைபெறவுள்ளது. சேர விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் நகல் உடன் தேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 9500314193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான பாமாயில் மற்றும் பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் பருப்பு ஆகியவை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 30-ம் தேதிக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் பாமாயில் மற்றும் பருப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள 1,01,800 கால் நடைகளை கோமாரி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் ஜூன் 10 முதல் 30 வரை 21 நாட்கள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. இதுவரை 38,960 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 62,840 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.06.2024 வரை குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தோல்வி, தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றோர்கள் மற்றும் டிகிரி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.