India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வீ. சஜீவனா இன்று தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேனி மாவட்டத்தில் நடப்பாண்டில் நெல் 688 ஹெக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 104 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 234 ஹெக்டேரிலும், பருத்தி 148 ஹெக்டேரிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 148 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (21.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது, சிறுதானிய உணவு எடுத்துக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வுக்கான முழுமாதிரி தேர்வு வரும் ஜூன்.24, 27 மற்றும் ஜூலை 02/05 ஆகிய தேதிகளில் சிறந்த வல்லுனர்கள் மூலம் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு டி.என்.பி.எஸ்.ஸி தரத்தில் நடத்தப்படவுள்ளது. தேர்வர்கள் இத்தேர்வினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு (ஜூன் 22, 23, 24) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தேனி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கவனத்துடன் வாகனம் ஓட்டுபடியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போடியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவருக்கும் இவரது கணவர் பாண்டிக்கும் ஏற்பட்ட பிரச்னையில் இவர் கணவருக்கு பயந்து பக்கத்தில் உள்ள காமுத்தாய் என்ற உறவினர் வீட்டில் சென்று ஒளிந்து கொண்டார். அங்கு தேடிச் சென்ற பாண்டியை காமுத்தாயின் உறவினர்கள் கல்லால் அடித்து மண்டையை உடைத்தனர். அவர் போடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போடி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், திருநங்கைகள் நலவாரிய அடையாள அட்டை, முதலமைச்சர் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில், சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 18-60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத, குடும்பத்தில் ஒருவர் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சா. வாடிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். பணம் கொடுக்கல் வாங்கலில் இவரது மனைவியின் அண்ணனை சர்க்கரைப் பட்டியைச் சேர்ந்த பொன்மணி மற்றும் குடும்பத்தினர் அடித்துள்ளனர். அதை தட்டி கேட்கச் சென்ற கணேசனை பொன்மணி அடித்து உதைத்து இரும்பு சுத்தியலால் மண்டையை உடைத்துள்ளார். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசன் கொடுத்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
போடி நாயக்கனூர், குரங்கணி, காரிப்பட்டி, சென்ட்ரல் அகமலை பகுதிகளில் காப்பி விவசாயம் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் தற்போது காயவைத்து இருப்பு வைக்கப்பட்டுள்ள தோல் நீக்கப்படாத காப்பி தளிர் கிலோ ரூ.310 வரையிலும் தோல் நீக்கப்பட்ட காப்பி அரிசி கிலோ 1 க்கு ரூபாய் 420 முதல் 450 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் செப்டம்பர் வரை விலை உயர்வு தொடர வாய்ப்புள்ளது.
தேனி மக்களவை தேர்தலை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஓட்டுப்பதிவு மையங்களின் எண்ணிக்கையை விட 20% கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தவகையில், ஓட்டுப்பதிவில் செயல்படாத 10 ஓட்டுப்பதிவு இயந்திரம், 16 கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் 49 ஆகியவை தேனி தாலுகா அலுவலகத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.