India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாயப்புள்ளதாக தகவல். தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.பியுமான தங்கதமிழ்செல்வனின் சகோதரர் தங்கபன்னீர்செல்வம் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தங்கதமிழ்செல்வன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் தங்க பன்னீர்செல்வத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேனி எல்.எஸ்., மில்ஸ் கூடைப்பந்து கிளப் சார்பில் 2-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஜூன்.28 முதல் 30ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இரவு பகல் ஆட்டமாக தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. போட்டியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்க உள்ளதாக எல்.எஸ்.மில்ஸ் நிறுவனத்தின் தலைவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் இன்று (ஜூன் 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமப்புற நிலங்களுக்கான முழுப்புலம் மற்றும் உட்பிரிவு இணையவழி பட்டா மாறுதல் தொடர்பான சிறப்பு முகாம் ஆண்டிபட்டி குறுவட்ட அளவர் குடியிருப்புடன் கூடிய அலுவலகத்தில் ஜூன் 26ஆம் தேதி முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
தேனி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகள் அருகில் இயங்கி வரும் கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், விடுதி காப்பாளர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இதனை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், கள் விற்பனை செய்தல், மதுபானங்கள் விதிமுறைகளை மீறி விற்பனை செய்தல், அண்டை மாநில மதுபானங்கள் விற்பனை செய்தல், கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான புகார்களை 9363873078 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், 10581 தொலைபேசிக்கும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். அவர்கள் ரகசியம் காக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கம்பம் மெட்டு வழியாக கேரளத்துக்கு செல்லும் 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த சாலையில் உள்ள 17-வது வளைவில் சேதமான சாலை சீரமைப்புப் பணிகள் இன்று (ஜூன்.23) நடைபெறுகிறது. எனவே ஒரு நாள் மட்டும் கம்பம் மெட்டு மலைச் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, தற்காலிகமாக சாலை மூடப்படுகிறது. குமுளி மலைச் சாலையை மாற்றுப் பாதையாக பயன்படுத்தி கொள்ளலாம் என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உரிமம் பெற்ற மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில், அரசால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே Rectified ஸ்பிரிட் உபயோகப்படுத்தப்பட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.