Theni

News November 18, 2024

தேனியில் கடன் தொல்லையால் தற்கொலை

image

தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் செந்தில் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(33). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆன்லைன் விளையாட்டுக்கு வெளி நபர்களிடம் அதிகமாக கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மன அழுத்தத்தில் இருந்த பிரபாகரன் நேற்று(நவ.17) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 18, 2024

நிலக்கல்லில் ரூ.10 கட்டணத்தில் மினி பஸ்

image

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தி விட்டு கேரள அரசு பஸ்களில் சென்று தரிசனம் முடித்து நிலக்கல்லுக்கு தாங்கள் நிறுத்தப்பட்ட வாகனத்தை தேடி வருவார்கள். இதனால் கூடுதல் கட்டணத்தில் வாகனங்களை பிடித்து செல்வது வழக்கம். இந்நிலையில், அப்படி செல்லும் பக்தர்களுக்கு ரூ.10 கட்டணத்தில் மினி பஸ் இயக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

News November 17, 2024

தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று (17.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 17, 2024

தேனி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

image

தேனி மாவட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமான அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ முகாம் போடி சின்னமனூர் மற்றும் உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் அரசு மருத்துவமனையில் நவ.19ஆம் தேதி போடி அரசு மருத்துவமனையிலும் நவ.21ஆம் தேதி சின்னமனூர் அரசு மருத்துவமனை நவ.23ஆம் தேதி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News November 17, 2024

வாக்காளர் முகாமில் திருத்தம் மேற்கொள்ள 2ம் நாள்

image

தமிழகத்தில் நேற்றும், இன்றும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியத்தேர்தல் ஆணையம், நவ.16, 17 மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. தேனி மக்கள் தங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாமில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

News November 16, 2024

தேனி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று (16.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 16, 2024

தேனி அருகே ஒருவர் அடித்து கொலை

image

பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த முருகன். அப்பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இன்று முருகன் அப்பகுதியில் இருந்தபோது, முன்விரோதத்தை மனதில் வைத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 16, 2024

நிழல்வலைக்கூடம் அமைக்க ரூ.1.30 லட்சம் மானியம்

image

கரும்பு சோகையினை தீ வைத்து எரிப்பதை தடுக்க அதனை தூளாக்கிட ஹெக்டேருக்கு 50% அல்லது ரூ.2,000 மானியமும், நிழல்வலைக்கூடம் அமைத்து CO18009 (புன்னகை) என்ற இரகம் மற்றும் பிற புதிய இரகநாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்திட நிழல்வலைக்கூடம் அமைக்க 50% அல்லது ரூ.1.30 லட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது என ஆட்சியர் தகவல்.

News November 16, 2024

தீ விபத்தில் குழந்தைகள் பலி – தேனி Ex எம்பி இரங்கல்

image

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சிராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலியாகினர் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துவதாகவும் உயிரிழந்த குழந்தைகளை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

News November 16, 2024

டாக்டர் அம்பேத்கார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளம் எண்.48-இல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் 25.11.2024-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிட வேண்டும் என்றார்.

error: Content is protected !!