India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் இணையதள முகப்பில் இந்தி மொழி உள்ளதால் அதனை உடனடியாக ஆங்கில மொழிக்கு மாற்றவும், தமிழ் இணையதளத்தை உருவாக்கவும் மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான O.பன்னீர் செல்வம் இன்று (நவ.19) கோரிக்கை விடுத்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் நவ.23 (சனி), நவ.24 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்திலுள்ள 563 நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெற உள்ள இரண்டாவது சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்று படிவங்களை பூர்த்தி செய்து, மைய அலுவலர் (DLO) / வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (BLO) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்.

தேனி மாவட்டத்தில் நவ.1 ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தற்போது 130 கிராம ஊராட்சிகளில் வருகின்ற நவ.23ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ரூ.50,000 வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இம்மானியத்தினை பெற தகுதியான பெண்கள் https://theni.nic.in என்ற இணையதளம் மூலம் டிச.7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 41 விற்பனையாளர் மற்றும் 08 கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரடி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற தகுதியானவர்கள் https://drbtheni.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546-291 929 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தெரிவித்துள்ளார். *பகிரவும்*

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு, பெரியகுளம், தேனி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ராபி சிறப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய நவ.15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடைசி தேதி நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் சுதந்திர வீதி தெருவை சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று(நவ.18) இரவு பிரிட்ஜ் திடீரென வெடித்தது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகி நாசமாயின. இத்தகவல் அறிந்த பெரியகுளம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

கடமலைக்குண்டு ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என கலெக்டர் சஜீவனா தெரிவித்துள்ளார்.மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தலைமை வகித்தார். யானைகள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.அப்போது அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார்.

பெரியகுளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் ஊர் நல அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 18 வயது பூர்த்தியடையாத நிலையில் தனக்கு 2022-ல் தனக்கு திருமணம் செய்து வைத்து தற்பொழுது 8 மாத குழந்தை உள்ளதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சிறுமியை திருமணம் செய்த கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று(நவ.17) போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை
Sorry, no posts matched your criteria.