Theni

News June 12, 2024

தேனி அருகே காவல் நிலையத்தில் ரகளை

image

உசிலம்பட்டியை சேர்ந்த இரண்டாம் நிலை காவலரான திவ்யா என்பவர் நேற்று முன்தினம் (ஜூன் 10) தாய்மாமன் மகன் விஜயகுமாா் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு ராஜதானி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இருவரது பெற்றோரையும் காவல் நிலையத்துக்கு போலீசார் விசாரணைக்காக வரவழைத்த நிலையில் இருதரப்பினரும் தங்களுக்குள் வாக்குவாதம் செய்து, கைகலப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

News June 11, 2024

தேவாரத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து

image

தேவாரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் நேற்று அவிநாசியப்பர் கோவில் அருகே முழு போதையில் தள்ளாடியபடி வந்த மணி, பொன்னுச்சாமி ஆகிய இருவரையும் கவனமாக போகும்படி கூறினார். அதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் பாண்டியனை சரமாரியாக தாக்கி, மணி தான் வைத்திருந்த கத்தியால் பாண்டியனை குத்தினார். தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசாரணை.

News June 11, 2024

தேனி மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் இடமாற்றம்

image

தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 7 தாசில்தார்களை இடமாற்றம் செய்து தேனி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆண்டிப்பட்டி துணை தாசில்தாராக பணியாற்றிய மருதுபாண்டியை தேனி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், ஆண்டிப்பட்டி தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றிய சதீஷ்குமாருக்கு உத்தமபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் கலெக்டர் மூலம் பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

News June 11, 2024

முன்னாள் எம்.எல்.ஏ-வை சந்தித்து வாழ்த்து பெற்ற எம்.பி

image

தேனி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி.- ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  எம்.பி-யாக பதவியேற்ற நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல் திட்ட தலைவருமான எல்.மூக்கையாவை இன்று மரியாதை நிமித்தமாக தங்கதமிழ்ச்செல்வன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News June 11, 2024

 மின் உற்பத்தி அதிகரிப்பு

image

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள பெரியார் நீர் மின் நிலையத்தில் கடந்த 2-ம் தேதி முதல் நேற்று (ஜூன்.10) வரை 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதன் காரணமாக நீர் மின் நிலையத்தில் அமைந்துள்ள 1 மற்றும் 4-வது ஜெனரேட்டர் மூலம் இன்று காலை முதல் 46 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

News June 11, 2024

அலைபேசியில் விளையாட பணம் தராததால் மாணவர் தற்கொலை

image

தேனி மாவட்டம் பாலார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(19) பிளஸ் 2 மாணவரான இவர் அலைபேசியில் அதிக நேரத்தை செலவழித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன்.8) அலைபேசியில் விளையாட தந்தையிடம் பணம் கேட்கவே தந்தை பணம் தர மறுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த ஈஸ்வரன் விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.

News June 11, 2024

தேனி: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

image

காமக்காபட்டியைச் சேர்ந்தவர் வேண்டாமணி . இவரது அக்கா மகன் தெய்வம் என்பவர், நேற்று சொத்தில் உனக்கு பங்கு தர முடியாது எனக் கூறி அவரை தாக்கினார். அவருடன் வந்த ஈஸ்வரி, ராணி ஆகிய இருவரும் வேண்டாமணியை அடித்து உதைத்தனர். உடன் வந்த பாண்டி என்பவர் அரிவாளால் அவரின் தலையில் வெட்டினார். படுகாயமடைந்த அவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 11, 2024

போடி: ஜூன் 12ல் ஜமாபந்தி

image

போடிநாயக்கனூர் அருகே, சோலையூர் கிராமத்தில் ஜூன் 12ஆம் தேதி ஆட்சியர்  தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. போடி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் ஆட்சித் தலைவரிடம் கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா இன்று தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

ஆண்டிபட்டி: 21 நாட்களுக்கு முகாம்

image

ஆண்டிபட்டி வட்டம், திருமலாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் 5-ஆவது சுற்று தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, இன்று (10.06.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார். கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News June 10, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது மாற்றுத்திறனாளிகளின்  சிரமத்தைப் போக்கும் விதமாக அவர்களுக்கு இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!