India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
தேனி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நேற்று(ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டதில் இறுதியாக திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா வெற்றி சான்றிதழை வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
2024 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் இதுவரை 4,70,036 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக கூட்டணியில் உள்ள அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 2,32,019 வாக்குகள் பெற்று 2 ஆம் இடம் பிடித்துள்ளார்.
நட்சத்திர எம்பி தொகுதிகளில் தேனியும் ஒன்று. ஏனென்றால், இங்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், அவரை எதிர்த்து அவரது சிஷ்யராக அறியப்பட்ட தங்கத் தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர். இதில் டிடிவி 202359 வாக்குகள் பெற்றுள்ளார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தங்கத் தமிழ்ச்செல்வன் 411375 வாக்குகள் பெற்றுள்ளார். இவர் 209016 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவியை வென்று அசத்தல் வெற்றிபெற்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி நாடாளுமன்றத் பகுதியில் திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். மேலும், டிடிவி தினகரன் 2அவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி தொடர்ந்து 3ஆவது இடத்தில் வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி நாடாளுமன்றத் பகுதியில் திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன் அமமுக சார்பாக டிடிவி தினகரன் கடும் போட்டியாளராக பார்க்கப்பட்ட நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் உள்ளார். டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தில் உள்ளதால் அமமுக தொண்டர்கள் மிகவும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, தேனி தொகுதியில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, பாஜக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, தேனி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் மொத்தம் 68.84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, அமமுக சார்பில் டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
2019இல் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத்குமார், 6.57% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், அதிமுக சார்பில் V.T.நாராயணசாமி, பாஜக சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?
Sorry, no posts matched your criteria.