Theni

News November 28, 2024

மாணவர்களுக்கு மருத்துவ உதவி – தேனி ஆட்சியர்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (நவ.27) நடைபெற்ற துறை சார்ந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஆர்.வீ.ஷஜீவனா தலைமை வகித்தார். இதில், பேசிய அவர் மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல், உடல்வலி, சோர்வு ஏற்பட்டால் ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து தேவையான மருத்துவ உதவிகள் செய்து தர வேண்டும் என அறிவுறுத்தினார்.

News November 28, 2024

தேனி மாவட்டத்தில் நாளை கடையடைப்பு போராட்டம்

image

வணிகப் பயன்பாட்டில் உள்ள கட்டடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ள ஜி.எஸ்.டி.கவுன்சிலின் நடவடிக்கையால் வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வரி விதிப்பை ரத்து செய்ய மத்திய, மாநில அரசை வலியுறுத்தி, தேனி மாவட்டத்தில் நாளை(நவ.29) ஒருநாள் மட்டும் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

News November 27, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று(நவ.27) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 27, 2024

புதிய வாக்காளராக சேர நாளை கடைசி நாள் கலெக்டர் அறிவிப்பு

image

தேனி மாவட்டம் முழுவதும் 1226வாக்குச் சாவடி மையங்களில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, முகவரி மாற்றம், நீக்கல் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்களாக இதுவரை பதிவு செய்யாதவர்கள் நாளை (நவ.28) க்குள் புதிய வாக்காளர்களாக தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வீ.ஷஜீவனா அறிவித்துள்ளார்.

News November 26, 2024

தேனியில் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்  

image

தேனி மாவட்டத்தில் 2024 ஆண்டுக்கான தமிழக அரசு சார்பாக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெரும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News November 26, 2024

புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு 

image

தேனி மாவட்டத்தில் உள்ள 1226 வாக்குச்சாவடிகளிலும் முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 26738 படிவங்கள் பெறப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலானது ஜன.6 அன்று வெளியிடப்படும். மேலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் 28.11.2024  வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேரடியாகவும், நேரில் வர இயலாதவர்கள் voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்றார்.

News November 26, 2024

தேனியில் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்  

image

தேனி மாவட்டம் 2024 ஆண்டுக்கான தமிழக அரசு சார்பாக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெரும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News November 26, 2024

வீரபாண்டி அருகே பெண் மர்ம சாவு

image

தேனி அருகே உப்புக்கோட்டையை சேர்ந்தவர் சுருளி (60). இவரது மனைவி வனஜா (55).‌ நேற்று (நவ.25) வனஜா அவரது வீட்டில் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் இருந்ததை பார்த்து அருகில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் வனஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2024

புதிய வகை வைரஸ் காய்ச்சல்-சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்

image

தேனி மாவட்டத்தில் தற்போது H3N2 என்ற புதிய வைரஸ் குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என அனைவரையும் பாதிப்படைய செய்கின்றது. இவ் வகை காய்ச்சலால் பயப்பட தேவையில்லை. இருந்த போதிலும் தொண்டை, உடல் வலி, தொடர் இருமல், குமட்டல், வாந்தி, அதீத சோர்வு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளுடன் காய்ச்சல் தொடர்ந்தால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

News November 26, 2024

மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களது செல்ஃபோன் வாட்ஸ்ஆப்பில் வரும் லிங்கை அழுத்தி வரும் செயலியை பதிவிறக்கம் செய்தால் பணம் பெறலாம் என வரும் செய்திகளை நம்பி யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற புகார்களை இந்த 19230 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!