India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உத்தமபாளையம் அருகே உ. அம்பாசமுத்தரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரை கடந்த 2019ம் ஆண்டு தனது தங்கையை அவதூறாக பேசியதாக கூறி பொம்மையசாமி அவரது நண்பர் செல்வக்குமார் ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று(டிச.03) வழக்கின் தீர்ப்பாக 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், ஆண்டிபட்டி, வைகை அணை, மயிலாடும்பாறை உட்பட 15 மின் வாரிய பிரிவுகளில் கடைகள், வீடுகளுக்கு மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளனர். அவர்களின் மின் இணைப்புகள் வருகின்ற (டிச.06) வெள்ளிக்கிழமை அன்று மின் துண்டிப்பு (MASS DISCONNECTION) செய்ய போவதாக இன்று (டிச.03) பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜதானி போலீசார் அம்மாபட்டி மணல் ரோடு மற்றும் தெப்பம்பட்டி ஒட்டபெருமாள் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சீட்டு கட்டை வைத்து சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த அம்மாபட்டியில் சம்ராஜ், ஒச்சாத்தேவர், முருகன், மகாராஜன், முருகன் மற்றும் தெப்பம்பட்டியில் ராஜேந்திரன், அழகுமலை, பாலமுருகன், சக்திவேல், பரமராஜ் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் செல்லும் வழியில் மாரியம்மன் கோவில்பட்டி அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் விபத்தில் இறந்து கிடப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக பள்ளி, கல்லுாரி நேரங்களில் டிப்பர் லாரி, கனரக வாகனங்கள் தேனி நகர் பகுதிக்குள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் காலை 11 மணி முதல் மாலை 3 வரை உள்ளூரில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. விதி மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று(டிச.02) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 313 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் முதன்மை எழுத்துத் தேர்வு பிப்ரவரி 2025-ல் நடைபெற உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 14.10.2024 முதல் நடைபெற்று வருகிறது. எனவே, படித்த இளைஞர்கள் பயன்பெறலாம் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி: கூடலூர் மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் சொட்டுநீர் பாசன மூலம் தட்டைப் பயறு, முட்டைக்கோஸ் மற்றும் தென்னை மரக்கன்றுகள் வளர்த்து வருகின்றனர். இன்று காலை குட்டியுடன் 6 காட்டுயானைகள் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே விளைநிலங்களுக்குள் யானைகள் வருவதை தடுக்க மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் பி.பார்ம் மற்றும் டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் இணையதளத்தின் மூலம்விண்ணப்பிக்கலாம். தற்போது பொதுமக்களின் நலன் கருதி 3.12.2024 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.