India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் கோகிலாபுரம் கிராமத்தில் டிச.11 அன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா, உதவித்தொகை, குடும்ப அட்டை, விவசாயத்துறை, விபத்து நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் நிகழ்வாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் அனைத்து மாவட்டங்களிலும் 1 வாரம் கொண்டாடப்பட வேண்டும் என அரசு ஆணையிட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் டிச.18 முதல் டிச.27 வரை கொண்டாடப்பட உள்ளது. இதில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் என ஆட்சியர் ஷஜீவணா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று 09.12.2024 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் உதவி தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு சாலை விதிகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்றுதெரிவித்துள்ளது. சாலை விதிகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் தங்களது குழந்தைகள் எதிர்காலத்தை பாதுகாப்பான முறையில் அமைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் டிச.14 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் பெரியகுளத்தில் எண்டப்புளி, தேனியில் தர்மபுரி, ஆண்டிபட்டி, உத்தமபாளையத்தில் தென் பழனி, போடி பாலார்பட்டி நியாய விலைக்கடைகளில் முகாம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 520 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா பெற்றுக்கொண்டார்.இக்கூட்டத்தில் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர்.

தேனி மாவட்டத்தில் கடமலைக்குண்டு, கண்டமனூர், வருசநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூ சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது இப்பகுதிகளில் சம்பங்கி பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.250 வரை விற்கப்பட்ட சம்பங்கி பூ தற்போது வரத்து அதிகரிப்பு மற்றும் தேவை குறைவின் காரணமாக கிலோ ரூ.60 க்கு விலை குறைந்து விற்கப்பட்டு வருகின்றது.

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு Rewards points சம்பந்தப்பட்ட அலைபேசி அமைப்புகள் மற்றும் லிங்குகளைநம்பி உங்கள் தனிப்பட்ட விவரங்களை கொடுத்து பணத்தை இழக்க வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. மேலும் இத்தகைய புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்காக டிச.13ல் போடி பாலார்பட்டி பென்னிகுவிக் கலையரங்கம், டிச.20ல் பெரியகுளம் எண்டபுளி புதுப்பட்டி சமுதாயகூடம், டிச.27ல் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.நலவாரியத்தில் சீரமரபினர் இனத்தை சேர்ந்த 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்.

போடியில் இருந்து சென்னைக்கு வாரத்தில் 3 நாட்கள் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இதில் பல்வேறு ரயில் பயணிகள், சங்கங்கள் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்க கோரிக்கைகள் வைத்தன. இந்நிலையில் நேற்று (டிச.7) சென்னையில் இருந்து போடி வந்த அதிவிரைவு ரயிலில் திரி டயர் ஏ.சி.பெட்டி 1 குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக முன்பதிவில்லாத பெட்டி 1 கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.